எழுந்தது இளைஞர் எழுச்சி! தமிழன்டா!
தமிழ்நாடு இதுவரை கண்டிராத எழுச்சி; புரட்சி என்றும் கூறலாம். புரட்சித் திருவிழா என்றும் அழைக்கலாம். ஜல்லிக்கட்டு என்பது ஒரு குறியீடுதான். தொடர்ந்து தமிழர்கள் டெல்லி, அந்நிய ஆட்சிகளால் புறக்கணிக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கு எதிராக எழுந்த ஆவேசம். கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்காகக் கல்வி உரிமை கோரி 1950ஆம் ஆண்டுகளில் தொடங்கிய சமூக நீதிப் புரட்சியின் தாக்கங்கள். தலைமுறைகளைக் கடந்து நிற்கும் கல்விப் புரட்சி உருவாக்கிய தன்னம்பிக்கை, தன்மான உணர்வு, சமூக வலைதளங்கள் வழியாக இந்த சக்திகளை இணைத்தது. “இந்த அரசியல் கட்சிகள் மீதோ, அரசியல் தலைவர்கள் மீதோ, திரைப்பட பிரபலங்கள் மீதோ எங்களுக்கு நம்பிக்கை இல்லை; விலகிச் செல்லுங்கள்” என்று அறிவித்து, தன்னெழுச்சியாகத் திரண்ட இலட்சக்கணக் கான இளைஞர்கள் 24 மணி நேரமும் மெரினா கடற்கரையை புரட்சிக் களமாக மாற்றினர். ‘தமிழன்டா’ என்ற ஒற்றை வாசகத்துக்குள்ளே பீறிட்டது இந்த உணர்வு. இந்தக் குறிச் சொல்லுக்குள் ஆண் அடையாளம் பதிந்திருக் கிறது என்பது...