Tagged: மாட்டு கறி

‘மாட்டுக்கறி’ சாப்பிடுவோர் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகலாம்!

அருணாசலப் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களாக இருக்கும் 3000 பேரில் பெரும்பாலோர் மாட்டுக் கறி சாப்பிடுவோர் என்ற தகவல் வெளி வந்திருக்கிறது. 2015ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்களே இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய பிரச்சார செயலாளராக உள்ள (பிரச்சார் பிரமுக்) மன்மோகன்  வைத்யா, 2015 டிசம்பர் 8 – அளித்த பேட்டியில் “மாட்டிறைச்சி சாப்பிடுவோர் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருப்பதில் எந்தத் தடையும் இல்லை. மாட்டிறைச்சி உண்ணுவோருக்கு ஆர்.எஸ்.எஸ். எதிரானது என்று ஆர்.எஸ்.எஸ்.மீது உருவாக்கப்படும் தவறான ‘பிம்பத்தை’ நீக்குவதற்கு நாங்கள் தீவிரமாக முயன்று வருகிறோம். இந்தியாவை முதன்மையான நாடாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. ஆர்.எஸ்.எஸ். ஒரு மத அமைப்பு அல்ல. அது ஒரு சமூக அமைப்பு. மாட்டிறைச்சியை தடை செய்ய ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தவில்லை. மக்களின் உணவுப் பழக்கங்களில் தலையிடுவதை ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை. தேச விரோதிகள் மட்டுமே எங்களின் எதிரிகள்” என்று...