Tagged: மறை திருநாவுக்கரசு

பெரியாரின் மனித நேயம்: மறைமலை அடிகள் மகன் படம் பிடிக்கிறார்

பெரியாரின் மனித நேயம்: மறைமலை அடிகள் மகன் படம் பிடிக்கிறார்

1939இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட பெரியாருடன் ஒரே சிறையில் இருந்தவர் மறைமலை அடிகளாரின் மகன் மறை. திருநாவுக்கரசு. பெரியாரின் மனித நேய உணர்வுகளை வியந்து பாராட்டி, இவர் எழுதிய கட்டுரை 1991ஆம் ஆண்டு ‘இளந்தமிழன்’ ஏட்டில் வெளி வந்திருக்கிறது. பெரியாரிடம் கருத்து மாறுபாடுகளை யும் கடந்த பெருந்தன்மையும், மனித நேயமும் தமிழினப் பார்வையில் உயர்ந்து நின்றதை பல்வேறு நிகழ்வுகளுடன் படம் பிடித்துக் காட்டுகிறது, இக்கட்டுரை. நான் 1939 இல் பெரியார் அவர்களுடன் சென்னை சிறைச்சாலையிலே இருந்தேன். நான் இருந்த அறைக்கு வலப்பக்கத்து அறையிலே அவர்கள் இருந்தார்கள். இடப் பக்கத்து அறையிலே திரு. அண்ணாதுரை இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையிலே அவரோடு எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. சிறையை விட்டு நாங்கள் வெளிவந்த பிறகு பெரியார் என்னை ஈரோட்டுக்கு அழைத்திருந்தார். அவர் வீட்டிற்குச் சென்றிந்தேன். நான்கு திங்கள்அவர் வீட்டிலேயே இருந்தேன். பெரியார் சிறைச்சாலையில் இருந்தபொழுது பல முறை அவர் ஊன் உண்பதை நான்...