‘மனுவாதிகளின்’ – கரூர் தீர்மானம்
“இரு பிறப்பாளராம் வருணங்களில், முதல் திருமணத்திற்கு அதே வர்ணத்தைச் சேர்ந்த பெண்ணையே மணம் செய்ய பரிந்துரைக்கப் படுகிறது.” – மனுநீதி அத்தியாயம் 3; சுலோகம் 12 “சூத்திரனின் மனைவி சூத்திரச்சியாகவே இருத்தல் வேண்டும்.” – மனுநீதி அத்தியாயம் 3; சுலோகம் 13. “மனு கலப்பு மணத்தை எதிர்ப்பவர். ஒவ்வொரு வர்ணத்தாரும் தமக்குள்ளே மணம் புரிதல் வேண்டும் என்பவர்.” – அம்பேத்கர். மனுவின் இந்த பார்ப்பன சட்டங்களே சமூகத்தை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. மனு கூறிய பிராமண – சத்திரிய – வைசிய – சூத்திரப் பிரிவுகளில் ஏற்பட்ட கலப்பு சாதிக் குழுக்களாக சமூகத்தைப் பிரித்துப் போட்டு விட்டது. இந்த சாதிக் குழுக்கள் தங்கள் சாதி அடையாளத்தை பாதுகாக்கவே துடிக் கின்றன. மீறினால் குடும்பப் பாசம் உறவுகளையே பின்னுக்குத் தள்ளிவிட்டு, பெற்ற மகளையே கொலை செய்யக்கூடிய வெறிக்கு உள்ளாகி விடுகிறார்கள். ‘தமிழினப் போராளியாக’ பெருமைபடுத்தப்படும் மருத்துவர் ராமதாசு முன்னிலையிலேயே அவரது “தளபதி”யாக அவராலேயே பெருமைப்படுத்தப்...