பார்ப்பன உளவியல் கட்டமைக்கும் பெண்ணடிமை: பூங்குழலி
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குறிப்பாக பாலியல் வன்முறைகள் குறித்து இன்று அதிகம் விவாதிக்கப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும், வன்புணர்வுகளும் இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை. ஆனால் பிற நாடுகளில் நடப்பதற்கும் இந்தியாவில் நடப்பதற்கும் அடிப்படையிலேயே பெரிய வேறுபாடு உள்ளது. இன்று இந்தியாவெங்கும் முதன்முதலாக வன் புணர்வை ஒரு விவாதப் பொருளாக மாற்றியிருக்கும் தில்லி கொடுமையையே எடுத்துக் கொள்வோம். அந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள், பாதிக்கப்பட்ட பெண் அழகாக இருந்தாள்; அவள் அழகில் தூண்டப்பட்டு அவளை வன்புணர்வு செய்தோம் என்று சொல்லவில்லை. அல்லது அவள் கவர்ச்சிகரமாக ஆடை அணிந்திருந்தாள்; அதனால் தூண்டப்பட்டோம் என்றுகூட சொல்லவில்லை. மணமாகாத அப்பெண் இரவு நேரத்தில் தனியாக ஒரு ஆணுடன் எப்படி நடமாடலாம்? அவளுக்கு பாடம் புகட்டவே அவளை வன்புணர்வு செய்தோம் என்று கூறினர். அண்மையில் சென்னையில் பலியான உமா மகேஸ்வரி விசயத்திலும் அதுவே நடந்துள்ளது. இரவில் தனியாக நடமாடினார்; கேலிசெய்யப்பட்ட போது, துணிச்சலுடன் அந்த ஆண்களை செருப்பால்...