ஜாதியமைப்பு – ஏன் விவாதிக்கப்படுவதில்லை?
அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு நூலுக்கு அருந்ததிராய் எழுதிய முன்னுரையிலிருந்து ஒரு பகுதியை கடந்த வாரம் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்திருந்தது. இது தொடர்பாக ‘அவுட் லுக்’ பத்திரிகை யில் அருந்ததிராய் விரிவாக பேட்டி அளித் துள்ளார். அரசியல், பொருளாதாரம், ஊடகங் களில் பனியாக்கள் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை புள்ளி விவரங் களுடன் சுட்டிக்காட்டிய அருந்ததிராய் அரசியல் கட்சிகள் ஜாதியமைப்பு ஜாதி பிரச்சினைகள் குறித்து ‘கண்டு கொள்ளாத’ போக்கை மேற்கொள்வதையும் சுட்டிக் காட்டியுள்ளார். ‘மண்டல்’ பரிந்துரை அமுலாக்கத்துக்குப் பிறகு சமகால இந்திய அரசியலில் ஜாதி ஒரு அடிப்படை அம்சமாக மாறியிருக்கிறதே என்ற வாதத்துக்கு அருந்ததிராய் பதிலளித் துள்ளார். இந்தியாவில் சமகாலத்தில் அதிகாரம், ஊடகம், பொருளாதாரங் களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆதிக்க ஜாதிப் பிரிவினரையும் உரிமைகள் மறுக்கப் பட்டோரையும் பார்க்க மறுக்கிறார்கள். மண்டல் குழு பரிந்துரை அமுலுக்கு வந்த பிறகு, ஜாதி அரசியலுக்குள் வந்துவிட வில்லை. அதற்கு முன்பே ஜாதி என்ற என்ஜின்தான்...