தமிழர் ‘இனப்படுகொலை’ உறுதியாகிறது
முள்ளிவாய்க்கால் படுகொலையைத் தொடர்ந்து, முதலில் அயர்லாந்து நாட்டிலுள்ள ‘மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயம்’ விசாரணை ஒன்றை நடத்தியது. வியட்நாமில் அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்திய பெருமை இந்த ஆணையத்துக்கு உண்டு. நேர்மையும் நம்பகத் தன்மையும் கொண்ட இந்த ஆணையத்தின் முன் இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றம் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் சான்றுகளாக உலகத் தமிழர் அமைப்புகளின் முயற்சியால் சேகரித்து முன்வைக்கப்பட்டன. மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்களை உறுதிப்படுத்தியது, இந்த விசாரணை ஆணையம். ஆனால், இனப்படுகொலைக்கான அறிகுறிகள் தெரிகிறது என்றும், அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த சான்றுகள் தேவை என்றும் கூறியது. மீண்டும் மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயம் இது குறித்து இம்மாதம் ஜெர்மனியில் கூடி விரிவாக ஆராய்ந்து இனபடுகொலை குறித்து விசாரிக்க நிபுணர் குழு ஒன்றை நியமித்திருக்கிறது. இந்த நிலையில் சிங்கள இராணுவத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்த இந்திய அரசின் பிரதிநிதி ஒருவரே ‘இனப் படுகொலை’ நடந்தது உண்மையே...