பெரியார் கொள்கைகளை வளர்த்தெடுக்க வேண்டும்! பேராசிரியர் நன்னன் நேர்காணல்
70க்கும் மேற்பட்ட பெரியாரியல் நூல்களை எழுதிக் குவித்துள்ள பேராசிரியர் நன்னன் அவர்களுக்கு இப்போது வயது 93. “முதுமைக்கான தளர்வுகள் இருந்தாலும் மூளை மட்டும் 24 மணி நேரமும் பெரியார் மற்றும் தமிழ் குறித்து அசை போட்டுக் கொண்டே இருக்கிறது” என்கிறார். சில பெயர்களை உடனே நினைவுக்குக் கொண்டு வருவதில் மறதி குறுக்கிட்டாலும் ஊன்றி நிற்கும் கொள்கை உணர்வுகள் சொற்களாக வெடிக்கின்றன. சென்னையில் உள்ள அவரது ‘சிறுகுடில்’ இல்லத்தில் ‘நிமிர்வோம்’ பேட்டிக்காக சந்தித்தோம், “மய்யமான பிரச்சினைகளை விட்டு விலகி நான்பேசிக்கொண்டேஇருப்பேன். நீங்கள்தான் மீண்டும் தொடங்கிய இடத்துக்கு என்னை இழுத்து வரவேண்டும்” என்ற நிபந்தனையோடு உரையாடத் தொடங்கினார். உரையாடல் 3 மணி நேரம் வரை நீண்டது. உண்மை பெரியாரிஸ்டுகளுக்கே உரிய தன்னடக்கம், மிகைப்படக் கூறாமை, தெளிவான சிந்தனை என்ற தனித்துவத்தோடு அவர் நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு: கேள்வி: திராவிடர் இயக்கம் நோக்கி ஈர்க்கப்பட்டது எப்படி? பதில்:அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நான் மாணவராக சேர்ந்தபோது எனக்கு திராவிட...