Tagged: பேராசிரியர் சரசுவதி

‘அகமணமுறை’ பாதிப்புகளை விளக்கிடும் ‘தீவரைவு’ ஆவணப்படம் திரையீடு

‘அகமணமுறை’ பாதிப்புகளை விளக்கிடும் ‘தீவரைவு’ ஆவணப்படம் திரையீடு

கருந்திணை தயாரிப்பில் தோழர் பூங்குழலி இயக்கத்தில் உருவான “தீவரைவு” ஆவணப் படத்தின் திரையிடல் கடந்த 9-05-2014, வெள்ளிக் கிழமை மாலை 6.30 மணிக்கு, சென்னை பனுவல் புத்தகக் கடை அரங்கில் நடைபெற்றது. நமது பண்பாட்டில் உறவுகளை நிலை நிறுத்துவதற்கும், புதிய உறவுகளை உருவாக்கு வதற்கும் திருமணம் ஒரு முக்கிய களமாக இருக் கிறது. இந்த திருமணமுறையானது உறவுகளை மட்டுமல்ல, ஜாதியையும் நிலைநிறுத்தி வருகிறது. பல நூற்றாண்டுகளாக ஜாதிக்குள் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் மண உறவுகள், சமுதாயத்தில் உடல் ஊனம், மன ஊனம், மருத்துவ ஊனங்களை அதிகமாக்கி வருகிறது. தொடர்ச்சியாக ஜாதிக்குள் நடைபெற்று வரும் திருமண முறையால், உருவாகும் அடுத்தத் தலைமுறை, உளவியல், உடலியல் ரீதியாக எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை மருத்துவ, மரபணு மற்றும் மானுடவியல் அறிஞர்களின் மூலம் விளக்குகிறது இந்த ஆவணப்படம். கருந்திணையும் பனுவலும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இத்திரையிடல் நிகழ்வில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவரும், இந்த...