Tagged: பெரியார் முழக்கம் 17102013 இதழ்

தமிழினப் போராளி நாமக்கல் நா.ப. இராமசாமி நினைவேந்தல் கூட்டம்

தமிழினப் போராளி நாமக்கல் நா.ப. இராமசாமி நினைவேந்தல் கூட்டம்

10.10.2013 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நாமக்கல் சுப்புலட்சுமி மகாலில் (23.9.2013 அன்று மறைந்த) தமிழினப் போராளி நா.ப.இராமசாமி நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு சிலம்பொலி சு. செல்லப்பன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நா.ப. இராமசாமி படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். பெ. மணியரசன், வழக்கறிஞர் இரத்தினம், முன்னாள் அமைச்சர் காந்தி செல்வன், எழுத்தாளர் வேலுச்சாமி, கன. குறிஞ்சி, நிலவன், கி.வெ. பொன்னையன், பரமத்தி சண்முகம் உள்பட பலர் நினைவேந்தல் உரையாற்றினர். இறுதியாக நா.ப.இராமசாமி மகன் இரா. அன்பழகன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 17102013 இதழ்

மன்னையில் திலீபன் நினைவு நாள் கருத்தரங்கு

மன்னையில் திலீபன் நினைவு நாள் கருத்தரங்கு

தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்; இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சரசுவதி பேசினார். பெரியார் 135 ஆவது பிறந்த நாள் மற்றும் தியாக மறவன் திலீபன் 26 ஆவது நினைவேந்தல் கருத்தரங்கம் கழகத்தின் சார்பில் மன்னார்குடி அம்பேத்கர் அரங்கத்தில் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் இரா. காளிதாசு தலைமையில் நடைபெற்றது. தஞ்சை மண்டல அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் இளையராஜா, நாகை மாவட்ட செயலாளர் மகேசு, தஞ்சை மாவட்ட செயலாளர் பாரி, எழுத்தாளர் பசு. கௌதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கத்தில் பெரியாரின் படத்தினை கருக்கல் பத்திரிகை ஆசிரியர் அம்ராபாண்டியன், திலீபன் படத்தினை தமிழன் சேவை மைய நிறுவனர் வாட்டார் கார்த்திகேயன் ஆகியோர் திறந்து வைத்து உரையாற்றினர். இனப்படுகொலை போர் குற்றம் மனித...

தூத்துக்குடியில் நாத்திகம் இராமசாமி நினைவு நாள் கூட்டம்

தூத்துக்குடியில் நாத்திகம் இராமசாமி நினைவு நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரில் நாத்திகம் பி. இராமசாமி  4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியும், பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டமும் 24.9.13 செவ்வாய் மாலை 6 மணியளவில் சீரணி அரங்கில் நடைபெற்றது. ஆழ்வை ஒன்றிய கழகத் தலைவர் பா. முருகேசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, துணைத் தலைவர் வே.பால்ராசு, நெல்லை மண்டலச் செயலர் கோ.ஆ.குமார், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் சண்முகவேல், நீதித் துறை சு.க. சங்கர் ஆகியோர் உரைக்குப் பின் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் சிறப்புரையாற்றினார். ஆழ்வை ஒன்றிய செயலாளர் இரா. உதயகுமார் நன்றியுரையாற்றினார். மாவட்டச் செயலர் க. மதன், பொருளாளர் இரவி சங்கர், தூத்துக்குடி மாநகர செயலர் பால். அறிவழகன் மற்றும் ஆதித் தமிழர் பேரவைத் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாத்திகம் இராமசாமி மகன்கள் காமராஜ், ஜவகர், சுபாஷ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்....

சென்னை ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் கேள்வி: இந்துக்களின் உண்மை எதிரிகள் யார்?

சென்னை ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் கேள்வி: இந்துக்களின் உண்மை எதிரிகள் யார்?

அரசு அலுவலகங்கள் காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதை நிறுத்தக் கோரி சென்னையில் அக். 10 ஆம் தேதி பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்: ஒரு மதச் சார்பற்ற நாட்டில் அரசு அமைப்புகள் மத அடையாளங்கள் இன்றி இயங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தவே இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். எந்த ஒரு வீட்டுக்குள் நடக்கும் மதச் சடங்குகளை தடைப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. அதில் அடங்கியுள்ள மூடநம்பிக்கைகளை சமுதாய இழிவை கருத்துகளாக முன் வைக்கிறோம். அதை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் உரிமை. அரசு நிறுவனங்கள் பல்வேறு மதநம்பிக்கை யாளர்களுக்கும், கடவுள், மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பொதுவானது. அதில் ஒரு மதம் தொடர்பான சடங்குகளை நடத்துவது எப்படி நியாயமாகும்? இந்த கேள்வியை உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளே கேட்டிருக்கின்றன. தாழையூத்து...

ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பெரியார் பிறந்த நாள்

ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பெரியார் பிறந்த நாள்

திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சின்ன தம்பி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் நீல கிருஷ்ணபாபு வரவேற்புரை யாற்றினார். பேராசிரியர்கள் திருநீலகண்டன், முனைவர் சுந்தரம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் இரா.சந்தானம்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ‘பெரியார் ஒரு சகாப்தம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் சிவகுருநாதன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் நீலகிருஷ்ணபாபு, முருகன், ஜெயபால், ரந்தீர்குமார், முத்துலெட்சுமி, மனோன்மணி, சிவகுருநாதன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்திருந்தனர். பெரியார் முழக்கம் 17102013 இதழ்

காமன்வெல்த் : சில தகவல்கள்

காமன்வெல்த் : சில தகவல்கள்

இனப்படுகொலை நடத்திய இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கருத்து அழுத்தம் பெற்றுவரும் நிலையில் ‘காமன்வெல்த்’ பற்றிய சில தகவல்கள்: பிரிட்டிஷ் காலனியின் கீழ் இருந்த நாடுகள் உருவாக்கிக் கொண்ட அமைப்பே ‘காமன் வெல்த்’. இதில் உறுப்பு நாடுகள் விரும்பி தாமாகவே இணையலாம். விருப்பமில்லா விட்டால் விலகிக் கொள்ளலாம். 1972 ஆம் ஆண்டு பங்களாதேஷ் நாட்டுக்கு ஏற்பு வழங்கியதை எதிர்த்து பாகிஸ் தான் காமன்வெல்த்திலிருந்து விலகி மீண்டும் 1989 இல் இணைந்தது. மனித உரிமை மீறல்கள் மற்றும் திட்டமிட்ட முறைகேடான ஆட்சி நடத்திய குற்றச்சாட்டு களின் கீழ் 2002 ஆம் ஆண்டில் ஜிம்பாவே தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டது. அதற்காக 2003 ஆம் ஆண்டில் அந்த நாடு தன்னை விலக்கிக் கொண்டது. அதேபோல் ஜாம்பியா நாடு 2013 அக்டோபரில் காமன்வெல்த்திலிருந்து விலகிக் கொண்டது. காமன்வெல்த்துக்கு உறுப்பு நாடுகளை நீக்கி வைக்கும் உரிமை இல்லை. ஆனால், தீவிரப் பங்கெடுப்பிலிருந்து நாடுகளை...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

சில அனுபவங்கள் காரணமாக பில்லி, சூன்யம் இருந்தாலும் இருக்கலாம் என்ற எண்ணத்துக்கு நான் வந்துள்ளேன்.      – ‘துக்ளக்’கில் சோ விடாதீங்க… அவ்வளவும் பா.ஜ.க.வுக்கு விழக் கூடிய ஓட்டுகள்; உடனே வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏற்பாடு செய்யுங்க…. தவறாக மரண தண்டனைகளை வழங்கி யுள்ளதை உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண் டிருக்கிறது. – ‘தினமணி’யில் முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அதனால் என்ன? ஒரு அரசியல் சட்ட அமர்வை நியமித்து, தவறாக மரண தண்டனை வழங்கவும், பிறகு அதை தவறு என்று அறிவிக்கவும் உரிமை உண்டு என்று தீர்ப்பு எழுதிவிட்டால் ‘போதும்’! திருப்பதி ‘ஏழுமலை’யான் தனது இரண்டா வது திருமணத்துக்கு “குபேரனி”டம் கடன் வாங்கினார். அதற்கு செலுத்த வேண்டிய வட்டியைத்தான் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக இப்போதும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். -’தினத்தந்தி’ கட்டுரை. ப. சிதம்பரம் சார்! இந்த குபேரன் கடனை தள்ளுபடி செய்து, திருப்பதி உண்டியல் வசூலை உடனே நிறுத்துங்க… அம்பானிக்கு எல்லாம் கடன்...

அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜைகளை நிறுத்து: களமிறங்கிய கழகத்தினர் கைது!

அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜைகளை நிறுத்து: களமிறங்கிய கழகத்தினர் கைது!

அரசு அலுவலகங்கள் – காவல்நிலையங்களில் ஆயுத பூஜைகள் போடுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் களமிறங்கியது. ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மக்களிடம் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. மயிலாடு துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவோடு சரசுவதி பூஜை கொண்டாட்டம் விழாவாக நடத்தப்பட்டதை எதிர்த்து களமிறங்கிய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேட்டுப் பாளையத்தில் பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கிய தோழர்கள் மீது பா.ஜ.க. ஆர்.எஸ் .எஸ் . காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பதட்டம் உருவானது. கழகத்தினர் மீது காவல்துறை பொய் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. செய்தி விவரம். மயிலாடுதுறையில்: மயிலாடுதுறையில் கழகத் தோழர்கள் அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்தவோ, கடவுள் படங்கள் வைப்பதோ கூடாது என்ற அரசு ஆணை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அனைத்து அலுவலகங்களுக்கும் காவல்நிலையங்களுக்கும் மாவட்ட தலைவர் மகாலிங்கம்...