Tagged: பெரியார் முழக்கம் 17042014 இதழ்
பா.ஜ.க. கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தனது மனைவி பெயரை அறிவித்ததன் பின்னணி யில் காஞ்சி காமாட்சியம்மன் இருப்பதாக அக்கோயில் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயி லில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி உலக நன்மை வேண்டி ஸ்ரீதச மஹா வித்யா ஹோமம் தொடங்கியது. மார்ச் 23 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய செயலர் முரளிதர ராவ், தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதன் பிரசாதத்தை கோயில் பிரதான அர்ச்சகர் நடராஜ சாஸ்திரி எடுத்துக் கொண்டு மார்ச் 26 ஆம் தேதி டெல்லியில் உள்ள மோடியை சந்தித்து கொடுத் துள்ளார். பிரசாதத்தில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டுப் புடவையும் இருந்துள்ளது. இந்த பட்டுப் புடவையை கொண்டு சென்ற நடராஜ சாஸ்திரி, “இந்தப் புடவையை உங்கள் மனைவியிடம் கொடுங்கள்” என்று மோடியிடம் கூறினாராம். சற்று மௌனம்...
‘அம்மா’தான் பிரதமராக வேண்டும் என்பது “ஞானசம்பந்த சாமி”களின் கட்டளை. அவர் என் கனவில் வந்து கூறிவிட்டார். – மதுரை ஆதினம். கனவில் வந்த ‘ஞானசம்பந்தனும்’ ஹெலி காப்டரில்தான் வந்தானா, ‘சாமி’? அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு, அயோத்தியில் இராமன் கோயில் கட்டுவோம். – பா.ஜ.க. தேர்தல் அறிக்கை புரியம்படி கூற வேண்டுமானால், “சட்டத்துக்கு உட்பட்டு” எப்படி பாபர் மசூதியை இடித்துத் தள்ளினோமோ, அதேபோல்! சரியா? காந்தி சமாதியில் ‘மவுன விரதம்’ நடத்த கெஜ்ரிவால், தனது ஆதரவாளர்களுடன் கூடியது சட்ட விரோதம். – தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடாதீங்க! தேசத் தந்தை சமாதியில் ‘மவுன விரதம்’ இருப்பதும், மக்கள் கூடுவதும், சட்ட விரோதம் மட்டுமல்ல, ‘தேசத்துக்கே விரோதம்’. இதையெல்லாம் அனுமதிக்கவே முடியாதுங்க… தேர்தலில் ஓட்டுப் போட்டவர்கள் அடையாள ‘மை’யை காட்டினால், மருத்துவ கட்டணம், பெட்ரோல் விலையில் சலுகை. – செய்தி தேர்தலில் ஓட்டுப் போடுவதற்கே ‘லஞ்சம்’ வந்துடுச்சா… கிழிஞ்சுது போங்க… 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தனக்கு...
‘அவுட் லுக்’ (மார்ச் 10) ஏட்டில் அருந்ததி ராய், அம்பேத்கர் நூலுக்கு எழுதிய முன்னுரிமை குறித்து வழங்கிய பேட்டியின் ஒரு பகுதி ஏற்கனவே பெரியார் முழக்கத்தில் (மார்ச் 20) வெளி வந்தது. பேட்டியின் மற்றொரு பகுதி: கேள்வி: காந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட வில்லையா? அவர் நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தரவில்லையா? பதில் : இதை சுதந்திரம் என்று சொல்வதைவிட வேண்டுமனால் ‘அதிகார மாற்றம்’ என்று சொல்லலாம். காந்திய-அம்பேத்கரிய விவாதத்தில் ‘ஏகாதிபத்தியம், சுதந்திரம்’ போன்ற வார்த்தைகள் நமது புரிதலில் இன்னும் சற்று ஆழமாகவும், சிக்கலாகவும் மாறிப் போகிறது. அம்பேத்கர் முதல்முறையாக, 1931 ஆம் ஆண்டு காந்தியைச் சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் மீதான அம்பேத்கரின் தீவிர விமர்சனம் குறித்து காந்தி கேட்கிறார். அதற்கு அம்பேத்கர் அளித்த பதில் மிக பிரபலமானது: ‘காந்திஜி! எனக்கென்று தாயகம் ஏதுவுமில்லை; தீண்டத்தகாதவர்கள் பெருமைப்பட இங்கு எதுவுமில்லை.” அவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பின்னரும்கூட, பிரித்தானியப் பேரரசுக்குப் ‘பொறுப்புணர்ச்சி’யுடன்...
நாட்டின் உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் ஆதிக்கமே தலைவிரித்தாடுகிறது. திருவாரூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் இதே நிலைதான்! முன்னாள் துணைவேந்தர் டாக்டா சஞ்சய் – பார்ப்பனர், இப்போதைய பதிவாளர் வி.கே. சிறீதர் – பார்ப்பனர், நிதி அதிகாரி பி.வி.இரவி – பார்ப்பனர், துணைப் பதிவாளர் வெங்கடேசன் – பார்ப்பனர் துணைவேந்தரை தேர்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள குழுவில் இடம் பெற்றோரும் பார்ப்பனர்களே! டாக்டர் ஜி.கே. ஜெயராமன் – கன்னட பார்ப்பனர், சி.ஆர். கேசவன் – பார்ப்பனர், கோபாலகிருஷ்ணகாந்தி – பார்ப்பனர். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தர் தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள கோபாலகிருஷ்ண காந்தி, சி.ஆர். கேசவன் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள். முன்னாள் துணைவேந்தர் வி.சி. சஞ்சய், மீண்டும் துணை வேந்தராக நுழையும் நோக்கத்தோடு தனக்கு பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்து கொண்டுள்ளார்.
கருத்து மாறுபாடுகள் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்தால் அதை வெளியிடவே கூடாது என்ற போராட் டங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இந்து மதம் பற்றி ஆய்வுக் கண்ணோட்டத்தில் வெளிவரும் நூல்கள் இந்தியாவில் வெளியிடவே கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். பார்ப் பனர்கள் மிரட்டுகிறார்கள். உடனே நூல் திரும்பப் பெற்று விடுகிறது. ‘இராமன்-கிருஷ்ணன் ஒரு புதிர்’ என்று அம்பேத்கர் எழுதிய நூலை திரும்பப் பெறக் கூறி மராட்டியத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கலவரத்தில் இறங்கினர். ஆனால், பெரும்பான்மை மக்களை “சூத்திரர்கள்”, “அடிமை கள்”, “பிராமணரின் வைப்பாட்டிப் பிள்ளைகள்” என்று கேவலமாக இழிவு செய்யும் மனுசாஸ்திரங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்ற குரலை எந்த மானமுள்ள தமிழனும் எழுப்பத் தயாராக இல்லை. கோயில் கருவறைக்குள் கடவுளிடம் நெருங்கி, கடவுளுக்கு அர்ச்சனை செய்யக்கூடிய உரிமை பிறப்பால் இழிவான ‘சூத்திரர்-பஞ்சமர்க்கு’ கிடையாது என்று சட்டப்படி உறுதி செய்யப்பட் டுள்ளதைப் பற்றி எந்த “மற”த் தமிழனுக்கும் மானம் பீறிட்டுக் கிளம்புவதில்லை. அதே கோயிலுக்குள் அதே...
ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் வாக்காளர்களாக இருந்து என்ன பயன்? அரசியலைத் தீர்மானிக்கும் அதிகாரங்கள் பெண்களுக்கு முற்றாகவே மறுக்கப்பட்டுத்தான் வருகின்றன. 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம், பாதிக் கிணற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்தச் சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தொடர்ந்து ஆண் ஆதிக்க அரசியல் தலைவர்கள் தடைபடுத்தியே வருகிறார்கள். நாட்டின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள மோடி, தனக்குத் திருமணமாகி, ஒரு மனைவி இருக்கிறார் என்ற உண்மையைக்கூட வெளிப்படுத்திடாமல் மறைத்து வைத்துள்ளார். மூன்று முறை சட்டமன்றத் தேர்தலுக்கான போட்டியிடும் விண்ணப்பப் படிவத்தில் இதை மறைத்துவிட்டு, இப்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான விண்ணப்பத்தில் மட்டும் குறிப்பிடுகிறார். “மோடி ஏன் மறைத்தார்; இவர் பதவிக்கு வந்தால், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா?” என்ற கேள்விகள் எதிர்முகாம்களில் முன் வைக்கப்படுகின்றன. நாம் ஒரே ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறோம். பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஒரு பெண் களத்தில் இறக்கப்பட்டு, அந்தப் பெண் மூன்று முறை தாக்கல் செய்த தேர்தல் விண்ணப்பப் படிவத்தில்...
‘நேர்மையாளர்’, ‘நடுநிலையாளர்’ என்ற வேடத்துக்குள் பதுங்கிக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனியத்தைப் பரப்பி வருபவர் ‘துக்ளக்’ சோ. மோடியைப் பிரதமராக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகாலமாக வலியுறுத்தி வருவதோடு, பாரதிய ஜனதா கட்சிக்குள்ளும் மோடிக்காக ஆதரவு திரட்டினார். தீவிர அத்வானி ஆதரவாளராக இருந்து அதற்கு நன்றிக் கடனாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றவர்தான் ‘சோ’. தனது ‘துக்ளக்’ ஆண்டு விழாவுக்கு மோடி, அத்வானி இருவரையும் அழைத்து ஒரே மேடையில் ஏற்றி ‘சமரச’ தூதுவராக, தன்னை அடையாளம் காட்டிவர். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கும் நெருக்கமான ஆலோசகராக உள்ளார். மோடியின் முதல்வர் பதவி ஏற்பு விழாக்களில் தவறாது பங்கேற்பவர், ஜெயலலிதா. ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்பு விழாவிலும் பங்கேற்றார் மோடி. இந்த நெருக்கத்தின் இணைப்புப் பாலமாய் நிற்பவர், ‘துக்ளக்’ சோ, மோடி பிரதமராக வேண்டும்; அவருக்கு வாய்ப்பு இல்லையேல் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று தனது பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வருகிறார். இப்போது வெளிப்படையாக பா.ஜ.க. கூட்டணி...
குஜராத் படுகொலையில் மோடிக்கு தொடர் பில்லை என்று உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு கூறிவிட்டது. எனவே மோடிக்கும் குஜராத்தில் 2002இல் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலைக்கும் தொடர்பே இல்லை. மோடி புத்தரின் வாரிசு, அகிம்சையின் அவதாரம் என்று மோடிக்கு முகமூடி போடுகிறார்கள் – மோடி ரசிகர்கள். ராகவன் என்ற ஓய்வு பெற்ற பார்ப்பன காவல் துறை அதிகாரியின் தலைமையில் மோடி உள்ளிட்ட 63 நபர்கள் மீது வந்த புகார் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு விசாரணையை நேர்மையாக நடத்தியதா? இது முக்கிய கேள்வி. இஷான் ஜாப்ரி என்ற கொலையுண்ட முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மனைவி, குஜராத்தில் 12 மாவட்டங்களில் நடந்த படுகொலைகளுக்கு காரணமான மோடி, அவரது சக அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 62 நபர்களை பட்டியலிட்டு, அவர்கள் மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். விசாரணை நடத்திய ராகவன்...