Tagged: பெரியார் முழக்கம் 03102013 இதழ்

இரு சக்கர வாகனப் பேரணிகள்; கழகக் கொடியேற்றங்கள்!: பெரியார் பிறந்த நாள் விழா எழுச்சி!

இரு சக்கர வாகனப் பேரணிகள்; கழகக் கொடியேற்றங்கள்!: பெரியார் பிறந்த நாள் விழா எழுச்சி!

பெரியாரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோட்டில் 17 இடங்களில் கொடியேற்று விழா மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. 22.9.2013 அன்று காலை 9.30 மணிக்கு ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் செல்லப்பன், மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியன் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் சுகுணா, ஈரோடு நகரத் தலைவர் திருமுருகன், செயலாளர் சிவானந்தம், மாவட்ட அமைப்பாளர்கள் செல்வராசு, குமார், அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார், அறிவியல் மன்ற  மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், லோகநாதபுரம் மோகன், கிருஷ்ணன், வெங்கட், கலைமதி, பள்ளிபாளையம் ரமேஷ், புகைப்படக் கலைஞர் எழில் ஆகியோர் உள்பட 74 தோழர்கள் இந்நிகழ்வில் பங்குக் கொண்டனர். ஈரோடு மண்டலச் செயலாளர் இராம. இளங்கோவன், சென்னை வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். பெரியார் சிலையிலிருந்து தோழர்கள் ஊர்வலமாக இரு சக்கர...

நீங்க செய்வது தப்புங்க தமிழரே!

நீங்க செய்வது தப்புங்க தமிழரே!

நீங்க செய்வது தப்புங்க தமிழரே! சொன்னா கேளுங்க சுயமரி யாதை வேணுங்க – பெரியார் சொன்னதையுங் கொஞ்சம் சிந்திச்சிதான் பாருங்க! தமிழரே…. நீங்க செய்த தெய்வத்துக்கு நீங்க பூசை செய்யத் தடுப்பவ னாருங்க? – கொஞ்சம் நீங்க நெனைச்சிப் பாருங்க – தடுப்பாணை நீங்களே உங்க வீட்டுக் கழைப்பது தப்புங்க! பள்ளுப் பறைய னென்றாக்கிப் பிறப்பிலே ஊனத்தை செய்தவ னாருங்க? – கொஞ்சம் உண்மை உணர்ந்திடப் பாருங்க – அந்த உலுத்தனை நீங்களே சாமிஎன் றழைப்பது தப்புங்க! ஆரிய வேதத்தை மதமென்றே அருந்தமிழ் நெறியைக் கெடுத்தவ னாருங்க? – கொஞ்சம் ஆர யோசித்துப் பாருங்க – ஆரிய அயோக் கியனை விட்டு வைப்பதே தப்புங்க! எங்கிருந்தோ வந்தே நம்மிடம் இரந்து தின்று கிடந்தவ  னாருங்க? – கொஞ்சம் நீங்களே எண்ணிப் பாருங்க – அந்த நன்றி கேடனைக் கும்பிட்டுக் கூனுவது தப்புங்க! தமிழையும் மண்ணையும் கெடுத்தும் தானே மேலோன் என்பவ  னாருங்க?...

மோடி கூட்டத்துக்காக 10000 பர்தா

மோடி கூட்டத்துக்காக 10000 பர்தா

மத்தியப் பிரதேசம், போபாலில் நடைபெறும் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்துக்காக முஸ்லீம் பெண்கள் அணியும்  10,000 பர்தாக்கள் தைக்கப்பட் டுள்ளன என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் தெரிவித்தார். “பர்தாக்களை தைத்த டெய்லர் ரூ.44.60 லட்சத் துக்கு ரசீது கொடுத்துள்ளார். இதில் ரூ.42 லட்சத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் செலுத்தியுள்ளது” என்றார். டெய்லர் அளித்த கட்டண ரசீதையும் செய்தி யாளர்களிடம் அவர் காண் பித்தார். இதனிடையே காங் கிரசின் குற்றச் சாட்டை  மறுத்துள்ளார் மத்தியப் பிரதேச பா.ஜ.க. மூத்த தலைவர் தீபக் விஜய் வர்ஜியா. மோடிக்கு கருப்புக்கொடி: திருச்சியில் கழகத்தினர் கைது 26.9.2013 அன்று திருச் சிக்கு வருகை தந்த நரேந்திர மோடிக்கு எதி ராக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார் பாக காலை 11.30 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கிய சாமி தலைமையில் கருப்புக் கொடி...

மேட்டூரில் வாகன பேரணி; பறை முழக்கம்

மேட்டூரில் வாகன பேரணி; பறை முழக்கம்

பெரியாரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக இரு சக்கர வாகன பேரணி மற்றும் கொடியேற்று விழா நிகழ்வுகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு குஞ் சாண் டியூரிலுள்ள சமத்துவ புரத்தில் பெரியார் சிலைக்கு மண்டல செயலாளர் அ.சக்தி வேல் மாலை அணி வித்தார். மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பறைமுழக்கத்துடன் பேரணி ஆரம்பமானது. ஜஸ்டின்ராஜ் தொடக்கவுரையாற்றினார். சமத்துவபுரத்திலிருந்து இரு சக்கர வாகன பேரணி மல்லிகுந்தத்தை நோக்கிச் சென்றது. மல்லிகுந்தத்தில் தம்புசாமி கழகக் கொடியேற்றி இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். தோழர்கள் அனைவருக்கும் சிறப்பான காலை உணவை மல்லிகுந்தம் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். மேச்சேரி பேருந்து நிலையத்தில் சூரி கொடியை ஏற்றி வைத்தார். கே.ஆர்.வி. ஸ்பின்னிங் மில்லில் அருள், நங்கவள்ளியில் இந்திரா, பனங்காட்டூரில் செந்தில் கழகக் கொடிகளை ஏற்றினர். குஞ்சாண்டியூரில் தியாகி திலீபன் வாகன நிறுத்தக உரிமையாளர் அருள் அனைவருக்கும் கேக் வழங்கினார். ஆர்.சி. பிளாஸ்டிக்...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

சில நேரங்களில் நாம் தவறு செய்கிறோம்; சில நேரங்களில் நீதிமன்றங்களும் தவறு செய்கின்றன. தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகள் பதவி பறிபோகும் என்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தவறை, இப்போது நாம் சரி செய்கிறோம்.   – சட்ட அமைச்சர் கபில்சிபல் இப்போது நீங்கள் செய்த தவறை ராகுல் காந்தி சரி செய்துள்ளார். ராகுல் செய்த தவறுக்காக சோனியா, மன்மோகனை சரி செய்து வருகிறார். அட போங்கப்பா, நீங்களும் உங்க தத்துவமும்! முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் காந்தி சிலைக்கு மரியாதை  செலுத்த வரும் பொது மக்களை தடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.  – செய்தி காந்தி என்பவரும் ஒரு முக்கிய பிரமுகர் தான் என்பதை காவல்துறைக்கு புரியும்படி நன்றாக எடுத்துச் சொல்லி யிருந்தால் இந்தத் தவறு நடந்திருக்காது. பரவாயில்லை, விடுங்கள். ஒரு மாத காலத்துக்குள் இந்தியாவிலிருந்து சுமார் 1350 தகவல்களை அமெரிக்கா திருடியுள்ளது.          – செய்தி இந்தத் தகவலையும் தகவல் உரிமை...