Tagged: பெரியார் முழக்கம்
தலையங்கம் உரிமைக் கொடி உயர்த்தும், பெண்கள்!
இந்து கோயில்களில் நுழைவதற்கே ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ அனைவருக்கும் பார்ப்பனர்கள் தடை போட்ட காலம் ஒன்று இருந்தது. அதுவே ‘ஆகம விதி’ – அதுவே தெய்வீக நடைமுறை என்று இறுமாப்பு பேசினர். இந்த ‘ஆகமம்’, ‘அய்தீக’ பூச்சாண்டிகளைப் புறந்தள்ளிவிட்டுத் தான் பெண்கள் உள்பட அனைத்துப் பிரிவினரும் கோயில்களுக்குள் நுழைந்து வழிபடவும் கோயில் ‘திருக்குளங்களில்’ நீராடவும் உரிமை வழங்கப்பட்டது. அதுதான் 1947ஆம் ஆண்டின் 5ஆவது சட்டமாகிய ‘ஆலய பிரவேச உரிமை’ சட்டம். ‘ஆகமம்’, ‘அய்தீகத்துக்கு’ எதிராக அப்படி ஒரு சட்டம் வராதிருக்குமானால், இப்போது கும்பகோணம் ‘மகாமகத்தில்’ முழுக்குப் போடும் உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டுமே இருந்திருக்கும். சைவ மடாதிபதிகளுக்கே கூட அந்த உரிமை கிடைத்திருக்காது. கோயில் நுழைவு உரிமை கிடைத்தாலும்கூட கோயில் ‘கருவறை’க்குள் கடவுளை நேரடியாக வணங்குவதற்கோ அல்லது உரிய பயிற்சி பெற்று அர்ச்சகராவதற்கோ ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ மற்றும் பெண்களுக்கு உரிமை கிடையாது என்று கூறி, பார்ப்பனர்கள் தங்கள் சமூக மேலாதிக்கத்தை விட்டுத் தர மறுக்கிறார்கள்....