‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு பாராட்டு!
‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் (ஜன.14) ஆகமங்களைப் பேசும் கூட்டம் ஆகமங்களை மீறுவது குறித்து வெளியிட்ட கட்டுரை மிக அருமையாக இருந்தது. ‘வேதாகமத்தை’ வள்ளலாரும் கடுமையாக சாடியுள்ளார். “வேதாகமம் என்று வீண்வாதம் ஆகின்றீர் வேதாகமத்தின் விளைவு அறியீர் சூதாகச் சொன்ன வலால் உண்மை வெளித் தோன்ற உரைத்தல் இலை என்ன பயனோ? இவை” – என்று சாடியிருக்கிறார். பிப். 4, 2016, ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழில் ரோகித் வெமுலா குறித்த பதிவுகளையும் கட்டுரைகளையும் பெரியார் முழக்கத்தில் படித்தேன். ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் வெளி வரும் கட்டுரைகள், பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டத்துக்கு சிறந்த படைக்கலனாக இருக்கிறது. குப்தர்கள் ஆட்சியைப் போல் ஒரு காட்டுமிராண்டி ஆட்சி இல்லை. அப்போது தான் வெவ்வேறு ஜாதிகளுக்கிடையிலான திருமணம் தடை செய்யப்பட்டது என்ற அரிய தகவலை இதழ் வெளியிட்டிருந்தது. இந்த காலத்தைத்தான் ‘பொற்காலம்’ என்று பொய்யாக வரலாறு எழுது கிறார்கள். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ காலத்தின் தேவை. –...