Tagged: பெரியார் தமிழினத்தி

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (12) நீதிக்கட்சியின் பார்ப்பன எதிர்ப்பு போலியானதா? வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (12) நீதிக்கட்சியின் பார்ப்பன எதிர்ப்பு போலியானதா? வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படு வதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கை யாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி அன்றைக்கு இருந்த அரசியல் அமைப்புக்கு ஏற்றத் தன்மையில் நீதிக்கட்சியினர் இயங்கி வந்தனர். பெரியாரை மட்டும் குறை சொல்வது என்ன நியாயம்? 1956 நவம்பர் 1 ஆம் நாள் தமிழகம் மொழி வழி மாநிலமாக பிரிந்தவுடன் பெரியார் 4-11-56 அன்று தி.க. செயற் குழுவை திருச்சியில் கூட்டினார். இனி ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற உரிமை முழக்கத்தை எழுப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ‘விடுதலை’ ஏட்டின் தலைப்பு பகுதியில் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று வெளியிட்டு வந்ததை மாற்றி ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று வெளியிட்டு வந்தது. பெரியார் மறையும்வரை ஏன் 1975 ‘எமர்ஜென்சி’ காலம்வரை இந்த முழக்கம் ‘விடுதலை’யில் இடம் பெற்று வந்தது. “தமிழ்நாடு...