Tagged: பெரியார் சிலை மூடல்

கழகம் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் பெரியார் சிலைகளை மூடமாட்டோம்

கழகம் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் பெரியார் சிலைகளை மூடமாட்டோம்

“தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதுமுள்ள பெரியார் சிலைகளை மூடும் எண்ணம் இல்லை; சிலையில் பதிக்கப்பட்டுள்ள பெரியார் கருத்துகளும் மூடப்படாது” என்று உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து திராவிடர் விடுதலை கழகத்தின் அமைப்பு செயலாளர் இரத்தினசாமி உயர்நீதிமன்றத்தில் கழக சார்பில் மனுதாக்கல் செய்திருந்தார். ”மூடநம்பிக்கை சமுதாயத்தில் உள்ள சாதி வேற்றுமையை ஒழித்து, பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். பெரியாரின் கொள்கையை எங்கள் அமைப்பு மக்களுக்கு எடுத்துக்கூறி வருகிறது. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. கோவையில் உள்ள தேர்தல் அதிகாரிகள், எங்கள் அமைப்பின் நிர்வாகிகளிடம் வந்து தந்தை பெரியாரின் சிலையை துணிகளை கட்டி மூடவேண்டும். திராவிடர் விடுதலை கழகத்தின் கொடிகளை பறக்க விடக்கூடாது என்று கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டுள்ளனர். எங்களது இயக்கம், தேர்தல் அரசியலில் பங்கேற்காத சமுதாய மாற்றத்துக்கான இயக்கம். அரசியல் கட்சி கிடையாது. தேர்தலிலும்...