Tagged: பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம், இளம்பிள்ளை 13062016

13-06-2016 திங்கட்கிழமை மாலை 6-00 மணியளவில், சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே, பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இளம்பிள்ளை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கருப்பூர் சக்திவேல் முன்னிலை வகிக்க, இளம்பிள்ளை பகுதி தலைவர் சி.தனசேகர் தலைமை ஏற்றார். முருங்கப்பட்டி இரமேசு வரவேற்று பேசினார்.இக்கூட்டத்தில் வழக்கறிஞர் வித்யாபதி, மோகன்ராஜ் ஆகியோர் உரையாற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் துவக்கமாக மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவினரின் பகுத்தறிவு – ஜாதி ஒழிப்பு பாடல்களும், காவை இளவரசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியும் நடைபெற்றது. இறுதியாக இளம்பிள்ளை பகுதி துணைச் செயலாளர் தங்கராஜ் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.