Tagged: பெரியாரியம்

17 வயதில் தொடங்கிய பொது வாழ்க்கை: திருவாரூர் தங்கராசு

17 வயதில் தொடங்கிய பொது வாழ்க்கை: திருவாரூர் தங்கராசு

பிறந்த நாள்: 6.4.1927; பிறந்த இடம் : நாகப்பட்டினம்; தி.க.வில் சேர்ந்தபோது வயது 17. அப்போதிலிருந்து திருவாரூர் வாசம். ரத்தக் கண்ணீர் நாடகம் எழுதிய போது வயது 19. இளமையில் செய்யும் தவறுகள், முதுமையில் எப்படி வாட்டும் என்பதே கதைக் கரு. இராமாயண ஆராய்ச்சி செய்து, வால்மீகி இராமாயணம் தொடங்கி, வடமொழியிலுள்ள பல்வேறு இராமாயண கதைகளையும் ஆய்வு செய்து, மலையாள இராமாயணம், கம்பராமாயணம் உள்பட ஆய்ந்து தெளிந்து எழுதிய நூல் இராமாயணம். அரசாங்கம் இந்நூலை தடைசெய்தபோது எம்.ஆர்.இராதா ‘இராமாயணம்’ என்ற பெயரில் பட்டி தொட்டி எங்கும் இந்நாடகத்தை அரங்கேற்ற, பெரும் புரட்சி செய்த நாடகம் அது. இரத்தக் கண்ணீர், பெற்ற மனம், தங்கதுரை என்ற மூன்று படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதியவர். இவரது பெரிய புராண ஆராய்ச்சி நூல் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து இவருடன் உரையாடி...

பல நூறு மேடைகளில் முழங்கிய பகுத்தறிவுக் குரல் ஓய்ந்தது : திருவாரூர் தங்கராசு விடை பெற்றார்

பல நூறு மேடைகளில் முழங்கிய பகுத்தறிவுக் குரல் ஓய்ந்தது : திருவாரூர் தங்கராசு விடை பெற்றார்

பெரியார் கொள்கைகளை மேடைகளிலும் கலை வடிவங்களிலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்களிடம் கொண்டு செல்வதையே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்ட திருவாரூர் தங்கராசு 5.1.2014 பிற்பகல் 3.45 மணியளவில் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழாமல் மரணத்தை சந்திக்கும் வரை வழமையாகவே இருந்தார். குடும்பத் துடன் உரையாடிக் கொண்டிருந்தவர், கழிப்பறைக்குச் சென்றார். அங்கேயே சாய்ந்துவிட்டார். அவரது மரணமும் சுயமரியாதையுடனேயே நிகழ்ந்துவிட்டது. 6 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்த அவரது இல்லத்திலிருந்து பெரியார் இயக்கத் தோழர்கள் அணி வகுப்புடன் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பெசன்ட் நகரிலுள்ள மின் மயத்தில் உடல் வீரவணக்க முழக்கங்களுடன் எரி யூட்டப்பட்டது. முன்னதாக, ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள அவரது இல்ல வாயிலில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்....