“பெரியாரின் பெண் விடுதலை இன்னும் நிறைவேறவில்லை!”
கோவை ‘விடியல் பதிப்பகம்’ வெளியிட்டுள்ள ‘இந்துத்துவத்துக்கு எதிரான 5 நூல்’ தொகுப்பில் இடம் பெற்றுள்ள தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலுக்கு க.வி. இலக்கியா எழுதிய நீண்ட முன்னுரையின் – ஒரு பகுதி. “மனிதன் ஏன் பிறந்தானோ, ஏன் சாகிறானோ என்பது வேறு விஷயம். அது புறமிருந்தாலும் மனிதன் இருக்கும்வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியுமாகும்.” இது பெரியாரின் வார்த்தைகள். ‘கல்யாண விடுதலை’ என்ற கட்டுரையின் இறுதி பத்தி களில் இருந்து எடுத்துள்ளேன். பெரியார் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வரும் வார்த்தையாக இருப்பது ‘வெங்காயம்’ என்பதுதான். ஆனால், எனக்கு நினைவிற்கு வருவது ‘இன்பமும் திருப்தியும்’ என்ற வாக்கியமே. இரண்டு வார்த்தைகளை உடைய இந்த அழகான வாக்கியம், “பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகத்தில் மட்டும் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது. மக்கள் அனைவரும் சுயமரியாதையுடனும், பகுத்தறிவுடனும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று மட்டும் பெரியார் நிற்கவில்லை. அப்படிப்பட்ட வாழ்க்கையில் இன்பமும் திருப்தியும்...