போராட்டம், மாநாடுகளில் பெண்களுக்கு முன்னுரிமை தந்த சுயமரியாதை இயக்கம் – முனைவர் ச. ஆனந்தி
சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய அம்சம் – அந்த இயக்கம் நடத்திய மாநாடுகளாகும். மாநில அளவிலும் – மாவட்ட அளவிலும் இத்தகைய மாநாடுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்துள்ளன, கொள்கை முழக்கங்களோடு ஊர்வலம் – சுயமரியாதைஇயக்கத்தின்கொள்கைளை விளக்கிடும் நீண்ட பேருரைகள் – பல்வேறு அரசியல் சமூக நிகழ்வுகள் குறித்த விரிவான தீர்மானங்கள் ஆகியவை இந்த மாநாடுகளின் தனிச்சிறப்புகள். பெண்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்யவும், பெண்களை பொதுவாழ்வில் பங்கெடுக்க ஊக்கப்படுத்தவும் இந்த மாநாடுளை சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறது. முதல் சுயமரியாதை இயக்க மாநில மாநாடு 1929 இல் சென்னை அருகே செங்கல்பட்டில் நடந்தது மாநாட்டில் சைமன் கமிஷன் சாதிய ஒடுக்குமுறை, மத நிறுவனங்களின் சுரண்டல் பற்றி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு திருமணம் மற்றும் மதச்சடங்குகள் பற்றி விசேட கவனம் செலுத்தி இந்த மாநாடு பரிசீலித்தது. அது தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை வேண்டும் என்பது...