அறிவியல் வேறு; தொழில்நுட்பம் வேறு!
அறிவியல் வேறு; தொழில்நுட்பம் வேறு! தமிழக அரசு பதிப்பித்த 10 ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகத்தில், “தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்’ என்ற பாடம் இருக்கிறது. அதில் வரும் வரிகள் இவை: “தமிழ் இலக்கியத்தை நுண்ணிதின் ஆய்கின்றபோது எத்தனையோ அறிவியல் கருத்துக்கள் ஆழப் புதைந்து கிடப்பதனை அறியலாம். அறிவியல் வளர்ச்சி மிகுந்த காலம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்பதனை, அதனை ஆராய்வோரே அறிவர்.” பாடத்தில் தமிழருக்கு விண்ணியல், பொறியியல், மண்ணியல், கனிமவியல், அணுவியல், நீரியல் போன்ற பல இயல்களில் ஆழ்ந்த அறிவு இருந்தது என்று கூறப்படுகிறது. இத்தகைய பாடங்கள் மாணவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடியவை. அறிவியல் என்பது கோட்பாடு (தியரி), சோதனை (எக்°பெரிமெண்ட்), கண்டறிதல் (ஃபைண்டிங்°) என்ற மூன்றையும் உள்ளடக்கிய செயல்பாடு. இயற்கையில் இருப்பதை, நடப்பதைப் பதிவு செய்வது மட்டும் அறிவியல் ஆகி விடாது. உதாரணமாக, ‘செம்புலப் பெயல் நீர்போல’ என்று செம்மண்ணைப் பற்றிப் புலவர் எழுதிவிட்டதால், அவர் மண்ணியல் அறிஞர்...