Tagged: பிரன்ட் லைன்

காந்தி தேசத்தில் மோடியின் ‘தீண்டாமை’

காந்தி தேசத்தில் மோடியின் ‘தீண்டாமை’

குஜராத்தில் ‘நவஸ்ராஜன்’ என்ற சமூகத் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் மார்ட்டின் மக்வான். 2001 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் அய்.நா.வின் இன வெறி எதிர்ப்பு மாநாடு நடந்தது. ஜாதிப் பாகுபாட்டையும் இனப் பாகுபாடாக அய்.நா. ஏற்கக் கோரி இந்தியாவிலிருந்து பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் வலியுறுத்தி, அதற்கு ஆதரவாக உலக நாடுகளில் கருத்துகளை உருவாக்கின. இந்தியாவிலிருந்து பங்கேற்கச் சென்ற மனித உரிமை அமைப்புகளின் கூட்டியக்கத்துக்கு தலை வராக செயல்பட்டவர் மார்ட்டின் மக்வான். குஜராத்தில் மனித மலத்தை கைகளாலேயே ‘தீண்டப் படாத’ மக்கள் துடைத்துக் கழுவும் அவலத்தை பட மாக்கி, அவர் சர்வதேச பிரதிநிதிகளிடம் போட்டுக் காட்டியபோது – அது அதிர்ச்சி அலைகளை உருவாக்கிற்று. கடந்த 2007 ஆம் ஆண்டு குஜராத்தில் நிலவும் மிக மோசமான தீண்டாமை கொடுமைகள் பற்றி விரிவான ஆய்வு ஒன்றை மக்வான் மேற் கொண்டார். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் கொண்ட உலக நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய...