Tagged: பிரணாப் முகர்ஜி

பார்ப்பன பண்ணயம் கேட்பாரில்லை பிரணாப் முகர்ஜி ஜெயேந்திரனிடம் ஆசி பெறலாமா?

வங்காளிப் பார்ப்பனர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிக்காலம் ஜூலை 24இல் முடிவடைகிறது. ‘பார்ப்பன தர்மத்தோடு’ வாழ்ந்தவர். பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக காஞ்சிபுரம் வந்து, சங்கராச்சாரியிடம் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார். ஜெயேந்திர சரசுவதி, சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளி. புதுவை நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தது. அரசு தரப்பு சாட்சிகள் எல்லாம் பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்டனர். புதுவை நீதிபதியிடம் தனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க தொலைபேசியில் பேரம் பேசியவர் ஜெயேந்திரர். இது ஆதாரத்துடன் அம்பலமாகி, உயர்நீதிமன்றத்திலும் வழக்காக பதிவாகியுள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், புதுவை நீதிமன்றம் ஜெயேந்திரரை விடுதலை செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை என்றும்  கேட்டு, அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம், ஜெயேந்திரனைக் காப்பாற்ற முயன்ற சக்திகளின் தலையில் குட்டு வைத்திருக்கிறது. இதையெல்லாம் ஒதுக்கிவிட்டுத் தான் குடியரசுத் தலைவர் ஜெயேந்திரனிடம் ஆசி பெற வந்திருக்கின்றார். ஜெயேந்திரனிடம்...