Tagged: பிணை

பூணூல் அறுப்பு வழக்கு: தோழர்கள் பிணையில் விடுதலை

சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதிகளில் பார்ப்பனர்களின் பூணூல்களை அறுத்ததாக கூறி, 20.04.2015 அன்று இராவணன், கோபி, திவாகர், நந்தகுமார், பிரதீப், பிரபாகரன் ஆகிய 6 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 8.10.2015 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தோழர்களின் பிணை கோரும் வழக்கில் தோழர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து 9.10.2015 காலை தோழர்கள் வேலூர் சிறையிலிருந்து விடுதலையான தோழர்களுக்கு இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறைச் சென்ற தோழர்கள் இராயப்பேட்டை பெரியார் சிலைக்கும் மயிலாப்பூர் அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தனர். தபசி குமரன், அன்பு தனசேகரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தென் சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை அருண், மாக்ஸ், நெப்போலியன், விடுதலை சிறுத்தைகள்...