‘பாவமன்னிப்பு’ விற்பனைக்குத் தயார்
ஆயிரக்கணக்கான வருடங்களுக்குமுன் – நாம் எவ்வளவோ உயர்ந்த நாகரிகமும் முற்போக்கும் பெற்றிருந்த காலத்தில், ஆங்கிலேயர்கள் மிக மோசமான வாழ்க்கை நடத்தி வந்தார்கள். அக்காலத்தில் நம்மைவிட மிக மோசமாக மத சம்பந்தமான பழக்க வழக்கங்களை அனுஷ்டித்து வந்தார்கள். அக்காலத்தில் அவர்கள் நிலை, இன்றைய நமது கேவல நிலையைவிட மிக மோசமாகவும், மானக் கேடாகவுமே இருந்து வந்திருக்கிறது. உதாரணமாக, அக்காலத்தில் அவர்கள் தங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெற ஒரு சுலபமான முறையைக் கடைப்பிடித்து நம்பச் செய்து வந்தார்கள். இன்று நமது நாட்டில் புரோகிதர்களால் நாம் ஏமாற்றப்படுவது போலவே அங்குள்ள பாதிரிமார்களால் அவர்கள் ஏமாற்றப்பட்டு வந்தார்கள். அதாவது, ‘பாவமன்னிப்புச் சீட்டு’ வாங்குவது என்பதாகும். ஒருவன் எத்தகைய தீச்செயலையும் செய்துவிட்டுப் பாதிரியாரிடம் சென்று, “அய்யா! நான் இன்ன பாவம் செய்தேன். அதற்கு ‘மன்னிப்பு டிக்கெட்’ வேண்டும்” என்று கேட்டதும், உடனே பாதிரியார், அந்தந்தப் பாவத்தின் நிலைக்குத் தக்கபடி கிரயம் போட்டுப் பணம் வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுத்து...