தலையங்கம்: மீண்டும் ‘377’
டெல்லி உயர்நீதிமன்றத்தால் 2009 இல் நீக்கம் செய்யப்பட்ட இந்திய குற்றவியல் சட்டத்தின் 377 ஆவது பிரிவுக்கு இப்போது உச்சநீதிமன்றம் உயிர் கொடுத்திருப்பது நாடு முழுதும் விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. “இயற்கைக்கு விரோதமாக உடல்உறவு கொள்வது தவறு; மீறுவோருக்கு ஆயுள் தண்டனை” என்று கூறும் இந்தச் சட்டம் 1860 இல் மெக்காலே உருவாக்கிய குற்றவியல் சட்டத்தில் இடம் பெற்றதாகும். பிரிட்டிஷ்காரர்கள் அன்றைய இங்கிலாந்தில் இதே போன்ற சட்டம் இருந்ததால் இந்தியாவுக்கும் கொண்டு வந்தார்கள். இன்று இங்கிலாந்திலேயே அந்த சட்டம் நீக்கப்பட்டுவிட்டது. 2014 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் ஆணும்-ஆணும் அல்லது பெண்ணும்-பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. திருமணத்தின் அடுத்தக்கட்டப் பரிமாணம் ‘இது’ என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது. 18 ஆப்பிரிக்க நாடுகளும், 20 ஆசிய நாடுகளும் இந்த ‘ஓர் பால்’ திருமண முறையை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளன. 78 நாடுகள் இதை குற்றமாகக் கருதுகின்றன. பாலின உறவுகள் தனி மனித உரிமைகளின் பாற்பட்டது....