தலையங்கம் : தடை போட வேண்டுமாம்!
மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஒரு விசித்திர வழக்கை சந்தித்திருக்கிறது. ‘பிராமணர்’களை எதிர்த்தும் அவதூறூகவும் பேசி வரும் தி.க. தலைவர் கி.வீரமணி, தந்தை பெரியார் தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் “பிராமணருக்கு” எதிராகப் பேச தடைவிதிக்க உத்தரவிடவேண்டும் என்பது வழக்கு. வழக்கைத் தொடர்ந்தவர் சிவகாசியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற வழக்கறிஞர். விசாரித்த நீதிபதிகள் வி.இராம சுப்பிரமணியன், வி.எம். வேலுமணி மனுவை தள்ளுபடி செய்து விட்டனர். “விமர்சனம் என்பது கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதி கருத்துரிமைக்கு அரசியல் சட்டத்தில் இடமிருக்கிறது. சரியான விமர்சனங்களை வரவேற்க வேண்டும். விமர்சனம் முறையற்றதாக நியாயமற்றதாக இருக்குமானால், ஒன்று அதை புறக்கணிக்கலாம். மற்றொன்று சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரலாம். விமர்சனம் எல்லை மீறினால் புத்தர் காட்டிய வழியில் அமைதி காக்கலாம். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். சகமனிதர்களை தனது வைப்பாட்டி மக்கள், சூத்திரர்கள்...