Tagged: பார்ப்பன தேசம்

பார்ப்பன தேசத்தில் தேச விரோதிகளே பெருமைக்குரியவர்கள்!

பார்ப்பன தேசத்தில் தேச விரோதிகளே பெருமைக்குரியவர்கள்!

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்யாகுமார் மீது, பா.ஜ.க. ஆட்சி தேசத் துரோக வழக்கு (இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவு) தொடர்ந்து சிறையிலடைத்துள்ளது. அவருடன் மேலும் 5 மாணவர்கள் மீதும் இதே தேச துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த இந்த மாணவர்கள், மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு திரும்பியுள்ளனர். ‘இந்த தேசத் துரோக வழக்கைத் திரும்பப் பெறவேண்டும்’ என்று, பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள், மனித உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பார்ப்பன மதவாதிகள் இப்போது ‘தேச பக்தர்’களாக அரிதாரம் பூசித் திரிகிறார்கள். இந்திய கம்யூனி°ட் கட்சியின் செயலாளர்களில் ஒருவரான டி.ராஜாவின் மகள், இதே பல்கலையில் பயின்று வருகிறார். ‘தேச விரோதிகள்’ பட்டியலில் பார்ப் பனர்கள் இவரையும் சேர்த்து விட்டார்கள். தமிழ் நாட்டில் ‘திமிர்த்தனமாக’ தடித்த வார்த்தைகளைக் கொட்டி, அவ்வப்போது ‘அசிங்கப்’பட்டுக் கிடக்கும் எச்.ராஜா என்ற பார்ப்பனர், ‘டி.ராஜா, தனது மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்’ என்று ‘கோட்சே’ மொழியில் பேசி, இப்போது சொந்தக்...