Tagged: பார்ப்பனிய ஆதிக்கத் திமிர்

கரன்சி ஒழிந்தது; கல்வீச்சு நின்றது!

கரன்சி ஒழிந்தது; கல்வீச்சு நின்றது!

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதால் ஏற்பட்ட பயன் ஒன்றை கண்டுபிடித்து காதில் பூ சுற்றியிருக்கிறார் மத்திய இராணுவ அமைச்சர்  பாரிக்கர். காஷ்மீரில் இராணுவத்தினர் மீது, மக்கள் (அதாவது பயங்கரவாதிகள்) கல்வீசுவது நின்று விட்டதாம்; ஒரு கல் வீசினால் ரூ.500 என்று ‘தீவிரவாதிகள்’ கொடுத்து வந்தார்களாம்! இனிமேல் இந்தியாவில் இராணுவத்துக்கு எதிரான எந்த பயங்கரவாத நடவடிக்கையும் அப்படியே நின்று போய்விடும் என்று நம்புவோமாக! அதேபோல் பாகிஸ்தான் இந்திய எல்லையிலும், சீனா-இந்திய எல்லைப் பகுதியிலும் இனி குண்டுகள் வெடிக்காது. அந்த செய்தியையும் பாரிக்கர் நாட்டுக்கு அறிவிக்கும் நாள் விரைவில் வரக் கூடும். அப்படியானால் ‘பாரத’ தேசத்தில் இராணுவத்துக்கே இனி வேலை இல்லை என்ற நிலை வந்தாலும் வரலாம். இதேபோல், “10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகளை ஒழித்து விட்டால் பிச்சைக் காரர்களை ஒழித்து விடலாமே” என்று ஒரு நண்பர் யோசனை கூறுகிறார். இதுவும் கூட ஒரு நல்ல யோசனைதான்! ஆக,...