பாசிசத்தை ஆதரிக்கும் பார்ப்பனிய அமைப்பு பா.ஜ.க.
காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜன.30 அன்று சென்னையில் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பாசிச எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து: பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் செயல்படும் ஒரு அமைப்பு. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் தேர்வு செய்யப்பட்டவர். மோடி-ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்து, பிறகு பா.ஜ.க.வுக்குள் திணிக்கப்பட்டவர். மோடியை பிரதமர் வேட்பாளராக அத்வானி ஏற்க மறுத்தார். உடனே ஆர்.எஸ்.எஸ். தலையிட்டு சமரசம் செய்தது. அத்வானி விருப்பம் இல்லாவிடிலும் ஆர்.எஸ்.எஸ். கட்டளைக்கு அடிபணிந்தார். இப்போது ‘தேசம் – தேச முன்னேற்றம் – வல்லரசு – இந்திய குடிமகன்’ என்ற சொல்லாடல்களை முன் வைத்து பா.ஜ.க.வும் மோடியும் தேர்தலை அணுகுகிறது. தங்களின் ‘மதவாதம் – இந்துராஷ்டிரம்’ என்ற அடிப்படையான கொள்கைகளை தற்காலிகமாக மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., இஸ்லாமியர்களை எதிரிகளாகக் கட்டமைத்து இந்துக்களின் ராஷ்டிரத்தை வேத புராண சாஸ்திரங்களின்...