Tagged: பாதிரியார் தீண்டாமை

பாதிரியார் சகாயராஜ் தீண்டாமை வெறி சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டம்: தோழர்கள் கைது

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மையனூர் கிராமத்தில் ஏசு குழந்தை பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமையாளர் பாதிரியார் சகாயராஜ் இந்த பள்ளியில் படிக்கும் நான்கு சிறுவர்களை செப்டம்பர் 5 அன்று அங்கு படிக்கும் மாணவர்களின் செருப்பை திருடியதாக பிடித்து, அதற்கு தண்டனையாக அடித்தும்,  விளையாட்டு திடலை சுற்றிவரச் சொல்லியும் கொடுமைப்படுத்தி யுள்ளனர். நான்கு பேரில் இருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிட்டு,  இருளர் சமூகத்தை சேர்ந்த இருவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று வெளியூர் போக பணம் இல்லாததால் வீடு திரும்ப முயன்றபோது, பள்ளி ஊழியர்கள் பார்த்து பள்ளிக்கே கொண்டு சென்றனர். செய்தி பெற்றோர்களுக்கு தெரிந்து அவர்கள் பாதிரியார் சகாயராஜை சந்தித்து விவரம் கேட்டபோது, அவர் பெற்றோர்களை மிரட்டியதோடு இது பிற்படுத்தப்பட்டோர் பலம் வாய்ந்த பகுதி அவர்களை அழைத்து உங்களை தாக்குவேன். நாளை காலை வந்து விடுப்பு சான்றிதழ் (கூஊ) பெற்றுக்கொள்ளுங்கள் என்றிருக்கிறார். இவர்களும் இது...