Tagged: பாஜக துரோகம்

பா.ஜ.க.வின் துரோகம் தோலுரிக்கிறது, ஆதரவு ஏடு

பா.ஜ.க.வின் துரோகம் தோலுரிக்கிறது, ஆதரவு ஏடு

காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் செய்வது பா.ஜ.க. தான் என்பதை விளக்கி, பா.ஜ.க. ஆதரவு நாளேடான ‘தினமணி’யே (அக்.5) தலையங்கம் தீட்டியுள்ளது. ‘கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை’ என்பதுபோல் பா.ஜ.க.வின் துரோகத்தை அதன் ஆதரவு ஏடே அம்பலமாக்கும் அந்தத் தலையங்கத்தை இங்கே வெளியிடுகிறோம். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மாற்றியமைக்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கு தீர்ப்பாகும்வரை, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் உத்தரவை நீதிபதிகள் தள்ளி வைக்கவேண்டும் என்று மத்திய அரசின் வழக்குரைஞர் ரோத்தகி முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்டு, தொழில்நுட்பக் குழுவை அனுப்ப உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது மத்திய அரசுக்கு இதுவரை தெரியாதா? மேலாண்மை வாரியத்தை மூன்று மாதங்களில் அமைக்க உத்தரவிட்ட நேரத்தில் மத்திய அரசு சும்மா இருந்துவிட்டு, அக்டோபர் 4ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று செப்டம்பர் 30ஆம் தேதி நீதிமன்றம் கூறிய போதும் சும்மா இருந்துவிட்டு, இப்போது...