பவுத்தர்களை வீழ்த்திய பார்ப்பனர்கள்
சேலம் வேத மரபு மறுப்பு மாநாட்டு சிந்தனை வேத மரபுகளை எதிர்த்தவர்களை பார்ப்பனர்கள் சூழ்ச்சிகரமாக வீழ்த்திய வரலாறு – கடந்த இரண்டு இதழ்களில் வெளி வந்தது. பவுத்தத்தை வேத மரபு வீழ்த்தியது எப்படி? ட பவுத்தத்தை முற்றிலுமாக ஒழித்து, மீண்டும் வேதத்தை அரியணையில் ஏற்றத் துடித்தார்கள் பார்ப்பனர்கள். இதற்கு – முதலில் கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களின் படைப்பு இலக்கி யங்களை எல்லாம் அழித்து ஒழிக்கும் வேலையைத் துவக்கினர். குறிப்பாக நாத்திகத்தை வலியுறுத்திய லோகாயதவாதிகளின் இலக்கி யங்களை முழுமையாக மீட்கவே முடியாதவாறு அழித்து ஒழித்து விட்டனர். இந்த லோகாயதர் களின் வேத-கடவுள் மறுப்பு சிந்தனைகளை எதிர்த்தும், இகழ்ந்தும் பார்ப்பனர்கள் எழுதிய நூல்களிலிருந்து தான் துண்டுதுண்டாக லோகாயத வாதம் பற்றிய கருத்துகள் காணக் கிடக்கின்றன. இதுபற்றி பிரபல ஆய்வாளர் பிரசாத் சட்போ பாத்யாயா இவ்வாறு கூறுகிறார்: “பிற சிந்தனை மரபுகளின் படைப்பிலக்கியங் களாவது ஓரளவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் லோகாயதர்களின் உன்னதப் படைப் பிலக்கியங்களின்...