தலையங்கம்: இடித்தது சுற்றுச் சுவரை மட்டும் அல்ல!
ஈழப் போரில் சிங்கள இராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள், தாயகத்தின் விடுதலைக்காக இராணுவத்தை எதிர்த்துப் போராடி களப்பலியான மாவீரர்கள் நினைவாக தஞ்சையில் கடுமையான உழைப்பினால் கட்டி எழுப்பப்பட்ட முள்ளி வாய்க்கால் முற்றம் – தமிழினத்தின் வரலாற்றுச் சின்னம்! இழிவையும், மடமையையும், மக்கள் பொதுப் புத்தியில் ஏற்றிக் கொண்டிருக்கிற கோயில்கள் அல்ல இவை. இந்த முற்றம், தமிழர்களின் உள்ளத்தில் விடுதலை வேட்கையை கனலாக மூட்டி நிற்கிறது. தமிழ்நாட்டில் இத்தகைய எழுச்சியூட்டும் முற்றங்கள் தான் கோயில்களுக்கு மாற்று என்று நாம் கருதுகிறோம். இந்த முற்றத்தைக் கட்டி எழுப்ப எத்தனையோ தமிழர்கள் தங்களை அர்ப்பணித்து உழைத்திருக்கிறார்கள். தங்கள் ஆற்றல்களை பங்களிப்புகளாக வழங்கியிருக்கிறார்கள். அது செங்கல்லும் சிமெண்டும் கலந்த கட்டிடம் மட்டுமல்ல; உணர்வுகளைச் சுமந்து நிற்கும் பாசறையும்கூட! அத்தகைய முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை நெஞ்சில் ஈரமின்றி அதன் சுற்றுச் சுவரையும் அழகு மிளிர உருவாக்கப்பட்டிருந்த...