Tagged: பரிகாரம்

‘அவாள்’ ஏடே கூறுகிறது: ஆன்மிகம் பிழைப்புவாதமாகிவிட்டது

‘அவாள்’ ஏடே கூறுகிறது: ஆன்மிகம் பிழைப்புவாதமாகிவிட்டது

பெரியாரியலாளர்கள் ஜோதிடமும் ஆன்மிகமும் பிழைப்புவாதம் என்று சொன்னால், இந்துக்களைப் புண்படுத்துவதாக எதிர்ப்பார்கள். ஆனால், ‘துக்ளக்’ பார்ப்பன ஏடே அப்படிச் சொல்கிறது. அந்த ஏடு வெளியிட்டுள்ள கட்டுரை: ஒரு நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இத்தனை பரிகார ஸ்தலங்களைத் தேடி தமிழர்கள் அலைந்ததில்லை. ஏதோ அவரவர் ஊர்களிலுள்ள சிவன் கோவில், பெருமாள் கோவில்களுக்குச் சென்று வழிபடுவதோடு தங்கள் வழிபாட்டையும், பிரார்த்தனை களையும் முடித்துக் கொண்டார்கள். ஆனால், இன்று தமிழர்கள், குரு பரிகார ஸ்தலம், சனிப் ப்ரீதி ஸ்தலம், ராகு ப்ரீதி ஸ்தலம் என்று ஏதேதோ ஊர்களுக்குக் கும்பல் கும்பலாகப் படையெடுக்கிறார்கள். ஏன் இந்த சனி, குரு, ராகு-கேது இத்யாதிகளுக்கான பரிகார பூஜைகளை, வழிபாடுகளை அவரவர் ஊரி லுள்ள சிவன் கோவில் நவகிரகங்களுக்குச் செய்தால் போதாதா என்று இன்று யாரும் யோசிப் பதில்லை. இவர்களை இப்படிப் பரிகாரங்களுக்காக ஊர் ஊராக அலைய விட்டதற்கு, இந்த ஜோதிட சிகாமணிகளும், பத்திரிகைகளும்தான் காரணம். அந்தக் காலத்தில் திருப்பதிக்கேகூட...