Tagged: பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள்

பெரியாருக்குக் காட்டும் நன்றி !

பெரியாருக்குக் காட்டும் நன்றி !

‘அறிவின் வழி’ என்ற மாத இதழ் கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் பகுத்தறிவு பேசும் இயக்கம் குறித்து எழுதியுள்ள தலையங்கம் எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருளின் உண்மையான தன்மையை பகுத்து அறிந்து கொள்பவன் பகுத்தறிவாளன் ஆகிறான். தமிழ்நாட்டில் பகுத்தறிவு என்ற சொல் கடவுள் மறுப்பு என்பதையே முன்னிலைப்படுத்துகின்றது. பகுத்தறிவாளன் என்றால் நாத்திகன் என்று சொல்லிவிட்டு ஒதுக்கி விடுகிறார்கள் அல்லது ஒதுங்கி விடுகிறார்கள். ‘பகுத்தறிவு’ என்று பேசத் தொடங்கியதுமே அதைத் தட்டிக் கழித்து விட்டு, புறக்கணித்துவிட்டு ஓட்டம் பிடிக்கும் அளவுக்கு ஓர் ஒவ்வாமைப் பண்பை வளர்த்திருக்கிறார்கள். இன்றைய நிலையில் பகுத்தறிவுவாதம் பேசுகிறவர்கள் மூன்று பிரிவாகப் பிரித்துக் கொள்ளலாம். இதில் முதல் பிரிவினர், பகுத்தறிவு என்ற சொல்லைப் பட்டா போட்டு எடுத்துக் கொண்டிருப்பவர்கள். வேறு எவரும் பகுத்தறிவு என்ற சொல்லை பயன்படுத்துவதை அல்லது அந்தப் பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்து வதை விரும்பாதவர்கள். அவ்வாறு ஓர் இயக்கம், அமைப்பு தொடங்கப்படுமானால், அதற்கு யாரும்...