Tagged: பகுத்தறிவு

17 வயதில் தொடங்கிய பொது வாழ்க்கை: திருவாரூர் தங்கராசு

17 வயதில் தொடங்கிய பொது வாழ்க்கை: திருவாரூர் தங்கராசு

பிறந்த நாள்: 6.4.1927; பிறந்த இடம் : நாகப்பட்டினம்; தி.க.வில் சேர்ந்தபோது வயது 17. அப்போதிலிருந்து திருவாரூர் வாசம். ரத்தக் கண்ணீர் நாடகம் எழுதிய போது வயது 19. இளமையில் செய்யும் தவறுகள், முதுமையில் எப்படி வாட்டும் என்பதே கதைக் கரு. இராமாயண ஆராய்ச்சி செய்து, வால்மீகி இராமாயணம் தொடங்கி, வடமொழியிலுள்ள பல்வேறு இராமாயண கதைகளையும் ஆய்வு செய்து, மலையாள இராமாயணம், கம்பராமாயணம் உள்பட ஆய்ந்து தெளிந்து எழுதிய நூல் இராமாயணம். அரசாங்கம் இந்நூலை தடைசெய்தபோது எம்.ஆர்.இராதா ‘இராமாயணம்’ என்ற பெயரில் பட்டி தொட்டி எங்கும் இந்நாடகத்தை அரங்கேற்ற, பெரும் புரட்சி செய்த நாடகம் அது. இரத்தக் கண்ணீர், பெற்ற மனம், தங்கதுரை என்ற மூன்று படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதியவர். இவரது பெரிய புராண ஆராய்ச்சி நூல் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து இவருடன் உரையாடி...

பல நூறு மேடைகளில் முழங்கிய பகுத்தறிவுக் குரல் ஓய்ந்தது : திருவாரூர் தங்கராசு விடை பெற்றார்

பல நூறு மேடைகளில் முழங்கிய பகுத்தறிவுக் குரல் ஓய்ந்தது : திருவாரூர் தங்கராசு விடை பெற்றார்

பெரியார் கொள்கைகளை மேடைகளிலும் கலை வடிவங்களிலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்களிடம் கொண்டு செல்வதையே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்ட திருவாரூர் தங்கராசு 5.1.2014 பிற்பகல் 3.45 மணியளவில் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழாமல் மரணத்தை சந்திக்கும் வரை வழமையாகவே இருந்தார். குடும்பத் துடன் உரையாடிக் கொண்டிருந்தவர், கழிப்பறைக்குச் சென்றார். அங்கேயே சாய்ந்துவிட்டார். அவரது மரணமும் சுயமரியாதையுடனேயே நிகழ்ந்துவிட்டது. 6 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்த அவரது இல்லத்திலிருந்து பெரியார் இயக்கத் தோழர்கள் அணி வகுப்புடன் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பெசன்ட் நகரிலுள்ள மின் மயத்தில் உடல் வீரவணக்க முழக்கங்களுடன் எரி யூட்டப்பட்டது. முன்னதாக, ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள அவரது இல்ல வாயிலில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்....

பகுத்தறிவு

பகுத்தறிவு

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்திரத்தையும் சமுத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கத் தயாரா யிருக்கிறீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவைச் சிறிதளவுகூடப் பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். இதில் மாத்திரம் ஏன் வெகுசிக்கனம் காட்டுகிறீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? – (கு.1.11.36;5:1)   மந்திரியாவதைவிட, முதல் மந்திரியாவதைவிட, கவர்னராவதைவிட, கவர்னர் ஜெனரலாவதைவிட, அதற்கும் மேலான மகாத்மா ஆவதைவிட முதலில் நாமெல்லாம் மனிதர்களாக வேண்டும். மனிதர்களாக வேண்டுமானால் முதலாவது பகுத்தறிவு விளக்கமாக ஆகவேண்டும். இயற்கைச் சிந்தனாசக்தி வளர்க்கப்பட வேண்டும். – (வி.6.12.47;1:3) ஒரு சேலை வாங்கினால்கூட சாயம் நிற்குமா? அதன் விலை சரியா? இதற்கு முன் இவர் கடையில் வாங்கிய சேலை சரியாக உழைத்திருக்கிறதா? இக்கடைக்காரர் ஒழுங்கானவர்தானா?

மதமா அரசா?

மதமா அரசா?

அரசாங்கம், சட்டதிட்டம், நீதி நிர்வாகம், தண்டனை, கண்டனை இல்லாமல் மனித சமூகம் எப்படிப்பட்ட மதத்தினாலாவது கூடி ஒழுங்கு முறையுடன் வாழ முடியுமா என்பதை யோசித்தால், மதம் மேற்கண்ட காரியங்களுக்கு உண்மையாய்ப் பயன்படுகின்றதா என்பது விளங்கும்., இன்று எந்தத் தேசத்திலும், எந்த மதத்திலும், எந்தச் சமூகத்திலும் உள்ள மக்களின் சொத்தும் சரீரமும் காப்பாற்றப்படுவது மதத்தினாலா, அரசாங்கச் சட்ட திட்டங்களினாலா என்பதை யோசித்துப் பார்த்தாலே, மதத்தின் காப்பும் நடப்பும் எப்படிப்பட்டது என்பது சுலபத்தில் புரிந்துவிடும். ‘பகுத்தறிவு’ தலையங்கம் 9.9.1934