Tagged: நேபாளம் ஆட்சி மாற்றம்

தலையங்கம் – நேபாளத்தில் ‘இந்து’ மத ஆட்சி ஒழிந்தது!

தலையங்கம் – நேபாளத்தில் ‘இந்து’ மத ஆட்சி ஒழிந்தது!

உலகின் ஒரே ‘இந்து’ நாடு என்று பார்ப்பனியம் பெருமையுடன் பறைசாற்றி வந்த ‘நேபாளம்’ – மதச்சார்பற்ற நாடாகி விட்டது. ‘இந்து மன்னர்’ ஆட்சி நடந்தது. அந்த மன்னர் விஷ்ணுவின் ‘மறு அவதாரம்’ என்று, மக்களை பார்ப்பனியம் நம்ப வைத்தது. மனு சாஸ்திரமே நாட்டின் சட்டமாக இருந்தது. மன்னர் ‘க்ஷத்திரியர்’; அவர் ‘பிராமண புரோகிதர்’ காலில் விழுந்து ஆசி பெற வேண்டும். சங்கராச் சாரி பார்ப்பனர்கள், தங்களின் தாய் நாடாக நேபாளத்தைக் கருதி வந்தனர். 1994ஆம் ஆண்டு முதல் ‘மனு தர்ம’ மன்னராட்சிக்கு எதிராக மாவோயிஸ்டுகள் ஆயுதம் தாங்கியப் போராட்டத்தைத் தொடங்கினர். 2006இல் ஆயுதப் போராட்டத்தை கை விட்டு, அரசியல் பாதைக்குத் திரும்பினர். அதைத் தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு 239 ஆண்டுகால மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, மக்களாட்சி முறையைக் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு எடுக்கப்பட்டது. ‘மதச்சார்பற்ற’ கொள்கையின் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த...