இந்திய அரசே! உச்சநீதிமன்றமே! நுழைவுத் தேர்வை திணிக்காதே! மாநிலங்களின் கல்வி உரிமையில் தலையிடாதே!
கல்வி அந்தந்த மாநிலங்களுக்கான பிரச்சினை; இதில் அவ்வப்போது மத்திய அரசு தலையிடுவதற்குக் காரணம் என்ன தெரியுமா? 1976ஆம் ஆண்டு அவசர நிலை காலத்தில் அன்றைய காங்கிரஸ் ஆட்சி கல்வியின் மாநில உரிமையில் மத்திய அரசு தலையிடலாம் என்று பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டதுதான். அதன் காரணமாக தமிழ்நாட்டில் இனி மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர வேண்டுமானால் ‘பிளஸ் டூ’ மதிப்பெண் மட்டும் போதாது; அகில இந்திய நுழைவுத் தேர்வு ஒன்றை எழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று இந்திய அரசு கூறுகிறது. இதை உச்சநீதிமன்றமும் வலியுறுத்திவிட்டது. நுழைவுத் தேர்வு கிராமத்திலிருந்து படிக்க வரும் மாணவ மாணவிகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பெரும் தடை என்பதால் தமிழ்நாட்டில் நீக்கப்பட்டது. இப்போது அந்த சுமை மேலும் ஏற்றப்பட்டுவிட்டது. மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு கல்வி அமைப்பு முறைகள் இருக்கும் போது அனைத்து மாநிலங் களுக்கும் ஒரே மாதிரியான அகில இந்திய தேர்வு முறையை நுழைப்பது...