Tagged: நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் “கொள்கை” அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் “கொள்கை” அறிவிப்பு

பார்ப்பனர் என்றால் ஆய்வாளராம்; அந்தணர் என்றால் உயர்ந்தோராம்; பெரியார் தமிழனை அடிமையாக்கி இனப் பெருமையை சிதைத்தவராம் இந்திய ஒருமைப் பாட்டைக் காப்பாற்ற தொண்டர்களுக்கு அறைகூவல்! ‘நாம் தமிழர் கட்சி’யின் கொள்கை ஆவணம், கோவையில் கடந்த 18 ஆம் தேதி வெளியிடப்பட் டுள்ளது. மக்களிடம் கட்சிக் கொள்கையாக முன் வைக்கப்பட்டுள்ள அந்த ஆவணம், பெரியாரை தமிழினத்தின் பகைவராக சித்தரிக்கிறது. திராவிட எதிர்ப்பு என்ற போர்வையில், பெரியார் எதிர்ப்பை முன் வைத்து, பார்ப்பனர்களுடன் நேச சக்திகளாக அடையாளம் காட்டிக் கொள்ள முன் வந்திருக்கும் சில குழுக்களோடு, நாம் தமிழர் கட்சியும், தன்னை இணைத்துக் கொள்ள முன் வந்திருக்கிறது. பெரியார் முன் வைத்த கருத்துகள் தமிழர்களையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டவை. அவைகளில் தமிழர்களை அடிமைப்படுத்தும் உள்நோக்கம் இருந்தது என்றும் அந்த ஆவணம் கூறுகிறது. அந்த ஆவணத்தில் பெரியாருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள சில கருத்துகளை மட்டும் அப்படியே இங்கு பதிவு செய்துள்ளோம். 1938 ஆம் ஆண்டில்...

இணையத்தில் கேள்விகளுக்கு கழகத் தலைவர் பதில் 02-04-2016 – நாம் தமிழர் கட்சி

நமது கழகத்தின் இணைய தளத்தில், கேள்வி பதில் பகுதியில் இந்த வாரம் வந்த கேள்விகளுக்கு கழகத் தலைவரின் பதில் தோழர் பகலவன் நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு படித்தீர்களா? படித்திருந்தால் அதை பற்றிய நிறை குறையை பற்றி பகிரவும் தோழர் கொளத்தூர் மணி நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவு எமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததும் தேவையெனில் எழுதுவோம்.   தோழர் பகலவன் ஆந்திரா, கர்நாடக மற்றும் கேரளா மாநிலத்தவர்கள் தங்களை திராவிடர் என்று அடையாள படுத்துவது இல்லை. நாம் மட்டும் ஏன் நம்மை திராவிடர்கள் என அடையாளப்படுத்த வேண்டும்? தோழர் கொளத்தூர் மணி ஆந்திர மாநிலம் சித்தூரில்தான் திராவிடப் பல்கலைக் கழகம் உள்ளது. அதுபோலவே கர்நாடக மாநிலம் மைசூரில்தான் திராவிட மொழியியல் ஆய்வு மையம் உள்ளது. மற்றொரு காரணம், திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிந்த வடிவம்தான் …. தமிழ்> திரமிழ்>திரமிழ> திரமிட> திரவிட> திராவிட … என்று திரிந்தது என்று கூறுகிறோம். அவ்வாறிருக்க தனிமொழிப் பெருமிதத்தோடு விளங்கும் பிற திராவிட இனத்தவர் தங்கள்...