Tagged: நாகலாந்து

பெண்களின் உரிமைகளை மறுக்கும் ‘நாகா’ பண்பாடு

பெண்களின் உரிமைகளை மறுக்கும் ‘நாகா’ பண்பாடு

பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதையே பண்பாட்டின் அடிப்படையில் நாகாலாந்தில் எதிர்க்கிறார்கள். பழம் பெருமை பண்பாடு என்பதற்காக கண்மூடித்தனமாக ஏற்பது சமூகத்தையே சீரழித்து விடும் என்பதற்கு நாகாலாந்து கலவரமே உதாரணம். ஒரு வார காலம், கிளர்ச்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது – இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து. பிப்ரவரி 1 அன்று நடைபெறுவதாக இருந்த, தற்போது இரத்து செய்யப்பட்டு விட்ட, நகராட்சி மன்றத் தேர்தல்கள்தாம் கலவரத்துக்குக் காரணம். இவ்வமைப்புகளில் மகளிருக்கு 33ரூ ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை எதிர்த்துத்தான் இத்தனை களேபரமும். மற்ற மாநிலங்களில் உள்ளது போலவே தங்கள் மாநிலத்திலும், மகளிருக்குத் தனி ஒதுக்கீடு வேண்டும் என்று, நாகாலாந்து அன்னையர் சங்கம், நீதிமன்றம் சென்று வாதிட்டது. 2012இல் இருந்து 2016 வரை நான்கு ஆண்டுகள் போராடியதன் பலன் – இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம், மகளிருக்கு 33ரூ ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், 16 ஆண்டு களுக்குப் பின்,...