நாகம்மையார் மறைவும் பெரியார் நடத்திய தடையை மீறிய திருமணமும்
பெரியரின் வாழ்க்கைத் துணையாகவும் அவரது காங்கிரஸ் கால போராட்டங்களான கள்ளுக்கடை மறியல், வைக்கம் போராட்டம் ஆகியவற்றில் ஏராளமான பெண்களையும் உடன் இணைத்துக் கொண்டு வீதியில் இறங்கி ஆவேசமாகப் போராடிய கொள்கைத் துணையாகவும் விளங்கியவர் நாகம்மையார். பெரியாரின் சுயமரியாதை இயக்கக் காலகட்டத்தி லும் சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு உணவும், உபசரிப்பும் கொடுத்துப் பேணிய தாயாகவும், பல சுயமரியாதை, சாதிமறுப்பு, மறுமணங்களை முன்னின் றும், தலைமையேற்றும் நடத்தியும் பெரியாருக்கு கொள்கைத் துணைவராக விளங்கியவர் அவர். அவர் 11-5-1933 அன்று இறந்து போனார். அதற்கு அடுத்த நாளே திருச்சிக்கு புறப்பட்டுப் போய், 144 தடை உத்திரவையும் மீறி, கிருத்துவர்களின் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்தார். அதற்காக கைது செய்யப்பட்டாலும், இரவு 11 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார் என்று பெரியாரின் வாழ்க்கை குறிப்புகள் நமக்கு கூறுகின்றன. அவ்வாறு பெரியார் தலைமையில் மணம் முடித்துக் கொண்ட அந்த கிருத்துவ இளைஞர் எம்.ஏ.சவுந்திர ராஜன். 46 ஆண்டுகள் கழித்து 27-5-1979...