Tagged: நரசிம்மராவ்

ராஜிவ் கொலை விசாரணையில் காங்கிரசின்  துரோகம்

ராஜிவ் கொலை விசாரணையில் காங்கிரசின் துரோகம்

தமிழக முதல்வர் 7 பேரை விடுதலை செய்தவுடன் துள்ளி குதிக்கும் காங்கிரசார், ராஜிவ் மீது உண்மையான பற்று கொண்டவர்கள் தானா? ராஜீவ் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதோடு தவறு செய்தவர்களை காப்hபற்ற முயன்றார்கள். இதோ, ஆதாரங்களுடன்…. ராஜீவ் காந்தி கொலை நடந்தபோது மத்தியில் ராஜீவின் ‘எடுபிடி’யான சந்திரசேகர் தலைமை யிலான ஆட்சி நடந்தது. வி.பி. சிங் ஆட்சியைகவிழ்த்த காங்கிரஸ், தனது ஆதரவோடு சந்திர சேகர் தலைமையில் ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கியிருந்தது. சந்திரசேகர் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியசாமி. ராஜீவ் கொலை நடந்த அடுத்த 6வது நாளில் ஜெக்தீஷ் சரண்வர்மா (ஜெ. எஸ். வர்மா) என்ற உச்சநீதி மன்ற தலைமையில் ஒரு விசாரணை ஆணை யத்தை சந்திரசேகர் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த சுபத்காந்த் சகாய், 1991 மே 27 ஆம் தேதி அறிவித்தார். ராஜீவ் காந்திக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோளாறுகள், குறைகள் நடந்தனவா என்பது குறித்து ஆராய்வதே இந்த...