Tagged: நன்கொடை

நன்கொடை

நன்கொடை

சேலம் மாவட்டம் கொளத்தூர் நகரக் கழகத் தலைவர் மாது மகன் பிரபாகரன் – சங்கீதா இணையரின் மகன் ச.பி. அகிலனின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக ஏட்டிற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். பெரியார் முழக்கம் 30082012 இதழ்

கழக வளர்ச்சி நிதிக்கு நன்கொடை

கழக வளர்ச்சி நிதிக்கு நன்கொடை

செயலவையில் கழகப் பொறுப்பாளர் கொளத்தூர் டைகர் பாலன் கழக வளர்ச்சி நிதிக்கு ரூ.25,000/- வழங்கினார். அமெரிக்க நாட்டில் பணியாற்றும் சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த பாலவாடியைச் சேர்ந்த மகேந்திரன், கொளத்தூர் நகர செயலாளர் இராமமூர்த்தி வழியாக கழக வளர்ச்சி நிதியாக ரூ.25,000/- அளித்துள்ளார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 30062016 இதழ்

‘சங்கீதா மெடிக்கல்’ பாலசுப்பிரமணியம் ஒரு இலட்சம் நன்கொடை

‘சங்கீதா மெடிக்கல்’ பாலசுப்பிரமணியம் ஒரு இலட்சம் நன்கொடை

மாநாட்டில் கழகத் தோழர் சேலம் ‘சங்கீதா மெடிக்கல்’ பாலசுப்பிரமணியம் மாநாட்டுக்கு ரூ.50,000-மும், கழகக் கட்டமைப்பு நிதிக்கு முதல் தவணையாக ரூ.50,000-மும் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் 29122016 இதழ்

நன்கொடை

கழக வளர்ச்சி நிதிக்கு பெங்களூர் தோழர்கள் சிவகுமார் – ரூ.5000, எம்.ஜி.ஆர். மணி – ரூ.3000, சித்தார்த்தன்- ரூ.2000, ‘புரட்சிப் பெரியார் முழக்க’ வளர்ச்சி நிதிக்கு விழுப்புரம் மதியழகன்-ரூ.100, நாகராசன்-ரூ.100 ஆகியோர் நன்கொடையாக வழங்கினர். பெரியார் முழக்கம் 10112016 இதழ்

மாநாட்டில் நன்கொடை

மாநாட்டில் நன்கொடை

தருமபுரி மாவட்டம் , பாலக்கோடு வட்டம், மேக்கனாம்பட்டி சு. வெங்கடேசன்-அ.வாசுகி இணையரின் மகள் இசைப்பிரியாவின் முதலாம் ஆண்டு (6.2.2016) பிறந்த நாள் மகிழ்வாக, ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடையாக சங்கராபுரம் கழக மாநாடு மேடையில் பொதுச் செயலாளரிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 04022016 இதழ்

பம்மல் பொன். இராமச்சந்திரன் நன்கொடை

பம்மல் பொன். இராமச்சந்திரன் நன்கொடை

பெரியார் இயக்கங்கள் அனைத்தையும் இணைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் மாநாடுகளைப் பாராட்டி, உணர்வாளர் பம்மல் பொன். இராமச்சந்திரன் கழகத்துக்கு ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 14012016 இதழ்

நன்கொடை

நன்கொடை

சாதி மறுப்பு, தன் விருப்ப (காதல்)த் திருமண இணையர் அ.இரா. தமிழமுதன்-வெ.ரெ. இறையரசி ஆகியோருக்குப் பிறந்த (6.12.2015) ஆண் குழந்தைக்கு ‘இசை’ எனப் பெயரிட்டதன் மகிழ்வாக ரூ.1000/- ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு வழங்கியுள்ளார். அ.இரா. தமிழமுதன், ‘நாளை விடியும்’ இதழ் ஆசிரியர் பி.இரெ. அரசெழிலன்-அனுராதா இணையரின் மகன் ஆவார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 17122015 இதழ்

கரூர்-திருச்சிப் பகுதிகளில் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை

கரூர்-திருச்சிப் பகுதிகளில் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை

ஊர்தோறும் சென்று மக்களை சந்தித்து கழகத்தின் செயல்பாடுகளை விளக்கிடும் துண்டறிக்கைகளை வழங்கி பெரியார் கொள்கைகளை விளக்கிடும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து நடத்தி வருகிறது. கழகத்தின் பரப்புரைக்காக வாங்கப்பட்டுள்ள ‘வேனில்’ தோழர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். வாகனத்திலேயே உணவுப் பொருள்களை எடுத்துப்போய் ஆங்காங்கே உணவு தயாரித்து சாப்பிட்டு, வாகனத்திலேயே தங்கி, தொடர்ந்து தோழர்கள் உற்சாகமாக பணியாற்றி வருகிறார்கள். கழகப் பொருளாளர் இரத்தின சாமி, இந்த இயக்கத்துக்கு தலைமை யேற்று திட்டமிட்டு வழி நடத்தி வருகிறார். சந்திக்கும் மக்களிடம் ரூ.10 மட்டுமே நன்கொடையாக வாங்கும் இந்தத் திட்டத்தில் பொது மக்கள் ஆர்வத்துடன் நன்கொடை வழங்குவதோடு கழக வெளியீடுகளையும் வாங்கி வருகிறார்கள். வெற்றி நடைபோடும் மக்க சந்திப்பு திட்டம் பற்றிய செய்தி தொகுப்பு: மே 22, 2014 : திராவிடர் விடுதலைக் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கத்தை, கரூரில் 22.5.2014 காலை 11 மணிக்கு மூத்த பெரியார் தொண்டர்...

கோவையில் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கியது

கோவையில் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கியது

இரண்டாம் கட்ட மக்கள் சந்திப்பு இயக்கம், ஜூன் 10 ஆம் தேதி பகல் 11 மணியளவில் கோவை காந்திபுரத்தில் தொடங்கியது. கழகப் பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் துரைசாமி, மாவட்ட தலைவர் நேரு உள்ளிட்ட 20 தோழர்கள் இயக்கத்தில் பங்கேற்றனர். கோவை நகரம் முழுதும் மக்களை சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கி, கழக நூல்களை விற்பனை செய்து வருகின்றனர். கழகத்தின் முயற்சியை பொது மக்கள் பெரிதும் பாராட்டி வரவேற்று வருகிறார்கள். ஒவ்வொருவரிடமும் 10 ரூபாய் என்று நன்கொடை திரட்டப்படுகிறது. 100 ரூபாய் நன்கொடை தருவோருக்கு 20 ரூபாய்க்கான நூல்கள் வழங்கப்படுகின்றன. ஜூலை 4 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் தொடருகிறது. 4 ஆம் தேதி மேட்டுப் பாளையத்தில் நிறைவு பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. 15.6.2014 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களை உக்கடம்பகுதியில் சந்தித்துப் பாராட்டுகளைத் தெரிவித்தார். அன்று மாலை கோவையில் நடந்த மறைந்த நடிகர் மணிவண்ணன் நூல்...