Tagged: நடைபாதை கோயில்

உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று தமிழக அரசு நடைபாதை கோயில்களை அகற்றுமா?

உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று தமிழக அரசு நடைபாதை கோயில்களை அகற்றுமா?

கோயில்களைக் கட்டி காசு வசூல் செய்யும் நபர்கள் எப்போதும் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும்தான் கட்டுகிறார்கள் என்பது ஊரறிந்த இரகசியம். சாலைகளில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணம் சாலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் கட்டடங்களேயாகும். ஆகவே, சாலைகளில் திடீரென்று ஆங்காங்கே முளைத்துள்ள கோவில்களை இடிக்க வேண்டும் என்று கூறி குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோத கோயில்களை இடிக்க உத்தரவிட்டனர். கோயில்களை இடித்தால் பக்தர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். இதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்று கூறி கோயில்களை இடிக்கும் உத்தரவை இரத்து செய்யுமாறு அகமதாபாத் நீதிமன்றத்தில் இந்து அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவர்களின் மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்ற நீதிபதிகள் கோயில்களை இடிக்கும் உத்தரவை இரத்து செய்தனர். அந்த இரத்து உத்தரவை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள பல்வேறு அமைப்புகள்...

நடைபாதை கோயில்கள் கடவுளை அவமதிப்பதாகும்: உச்சநீதிமன்றம் கண்டனம்

நடைபாதை கோயில்கள் கடவுளை அவமதிப்பதாகும்: உச்சநீதிமன்றம் கண்டனம்

“நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக கோயில்களை கட்டுவது, கடவுளையே அவமதிப்பதாகும். பொது மக்கள் பாதையை முடக்குவதற்கு கடவுள் ஒரு போதும் விரும்ப மாட்டார்” என்று உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா கூறியுள்ளார். 2006ஆம் ஆண்டு நடைபாதைக் கோயில்களை அகற்றக் கோரும் பொது நலன் வழக்கில் மாநில அரசுகள் உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு ‘சம்மன்’ அனுப்ப உச்சநீதிமன்றம் முடிவு செய்தபோது, மாநில அரசு வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய நிலையில் உச்சநீதி மன்றம் ‘சம்மன்’ அனுப்புவதை தவிர்த்தது. அதே 2006ஆம் ஆண்டில் குஜராத் உயர்நீதிமன்றம், அம்மாநிலத்தில் கட்டப்பட்ட அனைத்து சட்டவிரோத நடை பாதை கோயில்களையும் இடித்துத் தள்ள மாநகராட்சிகளுக்கு உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மத்திய பா.ஜ.க. ஆட்சி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் மீண்டும் கடுமையான கருத்துகளை முன் வைத்துள்ளது. இரண்டு வாரத்துக்குள் நடைபாதை...