Tagged: நடிகவேள்

கோயிலுக்கு வராதே!

“மனம் புண்படுகிறது என்று நினைப்பவர்கள் எல்லாம் எனது நாடகத்தைப் பார்க்க வரவேண்டாம்” என்று அறிவித்தார், மறைந்த புரட்சி நடிகர் நடிகவேள் எம்.ஆர். ராதா. இது நேர்மையான ஒரு கடவுள் “மறுப்பாளனின்” பிரகடனம்! “கோயில் கருவறைக்குள் நுழையாதே! இங்கே நான் மட்டுமே கடவுளின் பிரதிநிதி. இதோ பார், எங்களிடம் உச்சநீதிமன்றத் தீர்ப்பே இருக்கிறது” என்று பூணூல் மார்பை தட்டிக் கொண்டே பேசுகிறார்கள் அர்ச்சகப் பார்ப்பனர்கள். இது பார்ப்பனத் திமிரின் அடையாளம். “உன்னை இழிவு செய்யும் கோயிலுக்கு ஏன் மானங்கெட்டுப் போகிறாய்? அங்கே அர்ச்சகப் பார்ப்பானிடம் தட்சணையை கொடுத்துவிட்டு, கை கட்டி கர்ப்பகிரகத்துக்கு வெளியே நிற்கிறாயே; இது அவமான மில்லையா? அப்படியே உனக்கு பக்தி பீறிட்டு நிற்கிறது என்றால் உடைக்க வேண்டிய தேங்காயையும், கொளுத்த வேண்டிய கற்பூரத்தையும் கோயிலுக்கு வெளியே உடைத்து, நீயே வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போ. ‘சூத்திரன்’ என்று இழிவுபடுத்தும் அர்ச்சகப் பார்ப்பானிடம் கை கட்டி நிற்காதே.” இது பெரியாரின் சுயமரியாதைக்கான...