Tagged: தோழர் செல்வம்

குமரி மாவட்ட திவிக தோழர் செல்லம் மறைவு, உடல்தானம் 16062017

குமரி மாவட்ட விடுதலைக்காக மார்சல் நேசமணி தலைமையில்  போராடிய மொழிப்போர் போராளியும் தற்போதைய திராவிடர் விடுதலைக் கழக ஆதரவாளருமான தோழர்.செல்லம், அகவை:80, தொடுகுளம், காஞ்சிரகோடு அவர்கள் 16062017 அன்று அதிகாலை மரணமடைந்தார். அவரின் வீரவணக்க நிகழ்வு கழகத் தோழர் அனீஸ் தலைமையில்  நடைப்பெற்றது. தோழர்கள் நீதி அரசர், தமிழ் மதி, மணிமேகலை, மார்த்தாண்டம் மாலை பத்திரிகை ஆசிரியர் தோழர் செபக்குமார், கிறித்துதாஸ் ஆகியோர் உடல் தானம் பற்றிய அறிவியல் செய்திகளை இரங்கல் செய்தியாக பேசினர். தோழர்கள் இளங்கோ, விஸ்ணு, சூசையப்பா, கருணாநிதி, ஜான் மதி, அருள் ராஜ், பிரேமலதா, இராசேந்திரன், கம்யூனிஸ்ட் தோழர் ஜெயன் ஆகியோரின் வீரவணக்க முழக்கங்களுடன், அவரின் இறுதி விருப்பப்படி  ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக மருத்துவ உடற் கூறியல்த் துறைக்கு வழங்கப்பட்டது. அவருக்கு எங்களின் வீரவணக்கங்கள்