கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு: ஒரு விளக்கம் !
கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்கள் இங்கு பதிவிடப்படுகின்றன. முதலில் – திடீர் தமிழ் கம்பெனிகளின் எதிர்ப்பை நாம் கண்டு கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் இவர்கள் எப்போதும் நம்மை எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் நாம் எது செய்தாலும் எதிர்ப்பவர்கள், அதனால் அவர்களின் எதிர்ப்பு குறித்து நமக்கு ஒரு போதும் கவலை இல்லை. இரண்டாவதாக – நம் தோழமை சக்திகளின் விமர்சனங்கள்.அவற்றிற்கு நாம் கட்டாயம் பதில் சொல்லவேண்டிய கடமை இருக்கிறது. ஏனென்றால் தேர்தல் ஆதாயம் கருதியோ, பலாபலன் கருதியோ நாம் இந்த பெரியாரிய பணியில் இல்லை என்பது போலவே இயங்கும் தோழமை அமைப்பு தோழர்களிடம் நாம் நம் நிலையை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. நாளை தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் நாம் இணைத்து பணியாற்றத்தான் போகிறோம் என்பதை இவ்விடம் சொல்லத் தேவையில்லை. பெரியார் இயக்கங்கள் தேர்தல் ஆதரவு நிலைப்பாடு என்பது “யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் வந்துவிடக் கூடாது” என்பதை...