ஓயாத வடகலை, தென்கலை ‘குடுமி பிடி’
காஞ்சிபுரம் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்று பார்ப்பனர்கள் ‘குடுமி’பிடிச் சண்டை போட்டனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கு இலண்டனில் உள்ள ‘பிரிவீ கவுன்சில்’ வரை போனது. ஒரு வாரம் வடகலை நாமத்தையும் மறுவாரம் தென்கலை நாமத்தையும் மாற்றி மாற்றிப் போடுமாறு தீர்ப்பு வந்தது. இதே போல் திருவரங்கம் கோயில் யானைக்கும் பிரச்சினை வந்தது. யானைக்கு நாமத்தை மாற்றி மாற்றிப் போட்டதால் நெற்றிப் புண் உண்டாகி யானையே மரணமடைந்து விட்டது என்ற செய்தியும் உண்டு. இந்த ‘நாம’ப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. திருப்பதி ‘ஏழுமலை’யானுக்கும் இதே பிரச்சினைதான்! தென்கலை நாமம் (‘ஒய்’ எழுத்து), வடகலை நாமம் (‘யு’ எழுத்து). இரண்டுமே ஏழுமலையானுக்கு சாத்துவதுஇல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பொது அடையாளத்தை ‘நாமமாக’ போடுகிறார்கள். தமிழில் ‘ப’ எழுத்து வடிவத்தில் போடப்படுகிறது. இந்த முடிவில் இப்போது மீண்டும் குழப்பம் வந்துள்ளதாம். கடந்த நவம்பர்...