Tagged: திரையரங்கு

ஜன கண மன…

ஜன கண மன…

தேசபக்தியை திரையரங்குகள் வழியாகத்தான் ஊட்டி வளர்க்க முடியும் என்ற உறுதியான முடிவுக்கு உச்சநீதி மன்றம் வந்திருக்கிறது. இனி திரைப்படம் தொடங்கு வதற்கு முன்பு திரையரங்க கதவுகளை இழுத்து மூடிவிட்டு திரையில் தேசியக் கொடியை காட்டி ‘ஜன கண மன’ பாடலை பாட வேண்டுமாம்! அப்போது எல்லோரும் எழுந்து நிற்க வேண்டுமாம்! திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு புகைப் பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும்; மது அருந்துவது உடலுக்குக் கேடு தரும் என்ற விளம்பரங்கள் போடுவது கட்டாயப் படுத்தப்பட்டிருந்தது. இந்த வரிசையில் “ஜன கண மன பாடுவது  தேச பக்தியை வளர்க்கும்; அப்போது எழுந்து நின்றால், கால் வலி, மூட்டு உபாதை நீங்கும்” என்ற விளம்பரத்தையும் சேர்த்துக் கொள்ள லாம்! இதேபோல் ‘டா°மாக்’ கடைகள் நட்சத்திர ஓட்டல், மதுபான விடுதிகளில் ஜன கண மன’ பாடலை திறக்கும் போதும், மூடும் போதும் ஒலிபரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விடுமோ? வேண்டாமய்யா… அங்கே...